மிஸ்டர் தமிழ்நாடு 2020... `வாவ்' புகைப்படத் தொகுப்பு!

வி.ஶ்ரீனிவாசுலு

வெற்றியாளர்களுக்குக் குறிப்பிடத்தக்க அளவிலான பரிசுகளும் 'மிஸ்டர் இந்தியா' போட்டியில் தமிழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிஸ்டர் தமிழ்நாடு 2020 போட்டியை கோச் ஹரியுடன் இணைந்து இந்தியன் பாடி பில்டர்ஸ் அசோசியேஷன் (IBBF) நடத்தியிருக்கிறது.

அனைத்து வகையான கொரோனா நெறிமுறைகளையும் பின்பற்றி இந்த மிஸ்டர். தமிழ்நாடு 2020 போட்டி நடத்தப்பட்டது.

பல மாதங்களாக ஜிம்கள் மூடப்பட்டு இருந்ததால் இந்தப் போட்டிக்குத் தயாராவது சவாலான ஒன்றாக இருந்ததாக பங்கேற்ற போட்டியாளர்கள் தெரிவித்தனர்.

கோச் ஹரி மிஸ்டர். தமிழ்நாடு 2017 பட்டம் வென்றவர். சிமேரா (சப்ளிமென்ட்ஸ்), ஆல்ஃபா ஷீல்டு ஜிம் வேர் (ஆண்டிவைரல் ஜிம் உடைகள்) போன்ற ஃபீட்னெஸ் தீர்வுகளை உருவாக்கியவர்.

இந்தப் போட்டியும் இதில் கலந்துகொண்ட போட்டியாளர்களும் நிச்சயம் மக்களை உடற்பயிற்சிகளை நோக்கி உத்வேகிப்பார்கள் மற்றும் ஜிம்களில் சேரத் தூண்டுவார்கள் என்று நம்புவதாக போட்டியை நடத்துபவர்கள் கருத்து தெரிவித்தனர்.

போட்டியின் வகைகள்:

சீனியர்: 55 கிலோ, 60 கிலோ, 65 கிலோ, 70 கிலோ, 75 கிலோ, 80 கிலோ, 85+ கிலோ

போட்டியின் வகைகள்:

ஜூனியர்: 55 கிலோ முதல் 65 கிலோ வரை, 65 கிலோ முதல் 75 கிலோ வரை மற்றும் 75 கிலோ முதல் 85+ கிலோவிற்கு மேல்...

உடலமைப்பு

  1. குறைவான உயரம் கொண்டவர்கள் (172 செ.மீ கீழ்)

  2. அதிக உயரம் கொண்டவர்கள் (172 செ.மீ மேல்)

  3. ஆண்கள் உடலமைப்பு (ஜூனியர்)

  4. 21 வயதிற்குக் கீழ்

  5. மாற்றுத்திறனாளிகள்

  6. மாஸ்டர்கள் - 40+ ஆண்டுகள்

இந்த மிஸ்டர்.தமிழ்நாடு 2020 போட்டியில் 18 வயதுக்கு உட்பட்ட போட்டியாளர்களும் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.