அமெரிக்க அமைச்சரின் சீனப் பயணம் தற்காலிக நிறுத்தம் | கின்னஸ் சாதனை படைத்த நாய் - உலகச் செய்திகள்

சு.உ.சவ்பாக்யதா

அமெரிக்காவின் மீது சீன உளவு பலூன் பறந்துவருவதாக அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகமான பென்டகன் தெரிவித்திருக்கிறது. ஆனால், அதை வானிலை ஆய்வுக்காகப் பயன்படுத்தியதாக சீனா தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆப்கன் கல்வியாளரான இஸ்மாயில் மஷால் அந்த நாட்டிலுள்ள பெண்களின் கல்வித் தடைக்கு எதிராக தன் கோபத்தை வெளிப்படுத்தியதால், தாலிபன்களால் சிறைப்பிடிக்கப்பட்டார்.

பாகிஸ்தான் மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை டி.என்.ஏ மாதிரிகளைவைத்துக் கண்டுபிடித்துவருவதாக அந்த நாட்டின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Muhammad Sajjad

1960-களில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளரும், வாசனைத் திரவிய உற்பத்தியாளரான பேகோ ரபன்னே (Paco Rabanne) தன் 88-வது வயதில் காலமானார்.

Pierre Gleizes

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி (Antony Blinken) பிளிங்கனின் சீனப் பயணம், சீனாவின் உளவு பலூன் விவகாரத்தால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.

Jacquelyn Martin

போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த 30 வருடங்கள், 226 நாள்கள் வயதான பாபி என்ற நாய் உலகின் வயதான நாயாக கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது.

ஜப்பானில் சுஷி உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சுகாதாரமற்ற முறையில் நடந்துகொள்ளும் வீடியோக்கள் பேசுபொருளாகியிருக்கிறது. இதனால் 'சுஷி' உணவகங்கள் புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன.

அமெரிக்கா, கனடா வரலாற்றில் இல்லாத அளவுக்கு குளிரைச் சந்தித்துவருகின்றன. பல இடங்களில் -40 டிகிரி செல்சியஸ் நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Bernard Brault

இரானின் புகழ்பெற்ற இயக்கநர் ஜாஃபர் பனாஹி (Jafar Panahi), அவரைச் சிறைப் பிடித்ததால் தெஹ்ரான் சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இதையடுத்து, அவர் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

ஹாலிவுட் நடிகையான பிரிட்னி ஸ்பியர்ஸ் (Britney Spears) தன்னுடைய ரசிகர்களை அவர் பெரிதும் மதிப்பதாகவும், ஆனால் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை ரசிகர்களும் மதிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.