சு.உ.சவ்பாக்யதா
H5N1 நோய்த் தொற்று பரவல் பல நாடுகளில் அதிகரித்து வரும் நிலையில், உலகின் முன்னணி நிபுணர்கள் ஒன்றுகூடி இந்த நோய் குறித்து கலந்துரையாடினர்.
உலக வங்கி, சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க அமைப்பிலிருந்து உக்ரைனுக்கு மேலும் 2.5 பில்லியன் டாலர் வழங்குவதாக அறிவித்திருக்கிறது.
ரஷ்யா-உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனா கூறியதையடுத்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சீன அதிபரைச் சந்திக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்.
புகழ்பெற்ற அமெரிக்க நிதியாளர் தாமஸ் ஹெச் லீ, 78 வயதில் அவரது அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டதாக அவர் குடும்பத்தினர் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில் தைவான், சுற்றுலாவை மேம்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது. அதற்காக, இந்த ஆண்டில் 500 சுற்றுலாப் பயணிகளுக்கு 165 டாலர் வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது அந்த நாடு.
மத்திய துருக்கியில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. துருக்கி, சிரியா நிலநடுக்கங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 50,000-ஐ கடந்திருக்கிறது.
எல் சால்வடார் நாட்டில் பிரபல ரௌடி கும்பல்களுக்கு எதிராக அந்த நாட்டு அரசு கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில், சுமார் 60,000 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அதில், 2,000 பேர் புதிதாகத் திறக்கப்பட்ட சிறை ஒன்றில் அடைக்கப்பட்டனர்.
சீன நகரமான சீயானிலுள்ள தொல்பொருள் தளத்தில் சுமார் 2,400 ஆண்டுகள் பழைமையான கழிப்பறையின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இதுவே உலகின் மிகப் பழைமையான கழிப்பறை என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசுக் கட்சியின், அமெரிக்க அதிபர் வேட்பாளர் ரேஸில் இருக்கும் நிக்கி ஹாலே, ``நான் வெற்றி பெற்றால் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுக்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்துவேன்’’ என்று கூறியிருக்கிறார்.