Ashwin: தமிழகத்தின் சுழற்புயல்; பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனம்! அஸ்வின் பற்றிய 10 சுவாரஸ்யங்கள்

பிரபாகரன் சண்முகநாதன் & Mouriesh SK

அப்பா ரவிச்சந்திரன், ரயில்வே ஊழியர். அம்மா சித்ரா, தனியார் நிறுவன ஊழியர். தாத்தா நாராயணசாமி. குடும்பம்தான் எல்லாமே. எந்த விஷயத்தையும் முதலில் பகிர்ந்துகொள்வது குடும்பத்தினரிடம்தான்.

தன்னுடன் பத்மா சேஷாத்ரி பள்ளியில் படித்த ப்ரீத்தியை 2011-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் அஷ்வின். அகிரா, ஆத்யா என இரண்டு மகள்கள்.

கிரிக்கெட் கற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஓப்பனிங் பேட்ஸ்மேன். ஃபாஸ்ட் பௌலர். பயிற்சியாளர் சுனில் சுப்ரமணியம்தான் இவரை சுழற்பந்துக்குத் திருப்பிவிட்டார்.

ஐ.பி.எல். போட்டிக்காக இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் ‘சி.எஸ்.கே டீம்ல இருக்கீங்க’ என்று கையெழுத்து வாங்கிய நாளை, மறக்க முடியாத நாளாகக் குறிப்பிடுவார்.

நடிகர்களில் ‘டைரக்டர்ஸ் ஆர்ட்டிஸ்ட்’ மாதிரி, ப்ளேயர்களில் இவர் ‘கேப்டன்ஸ் ப்ளேயர்’. ‘தலைவனைப் பின்பற்று’ என்பதை இவர் பின்பற்றுவதால், எந்த கேப்டன் என்றாலும் இவர், அவர்களின் குட் புக்ஸில் மிளிர்கிறார்.

இசை ரசிகர். இளையராஜா, ரஹ்மான் என்று பெரிய கலெக்‌ஷன் வைத்திருக்கிறார். இந்த இசை, இந்த கம்போஸர் என்றில்லாமல் கலந்துகட்டி ரசித்துத் தள்ளும் ரசிகர்.

Ravi Ashwin

ஐந்து விக்கெட், 10 விக்கெட் என்று சாதித்த மேட்ச்களின் பந்துகளைப் பத்திரமாக, கையெழுத்துப் போட்டுப் பாதுகாத்து வைத்திருக்கிறார்.

Ravichandran Ashwin

செல்ல நாய்கள் பிரியர். ரிலாக்ஸுக்கு அவ்வப்போது மனைவியுடன் ஷாப்பிங் செல்வார்

#AUSvIND | Ravichandra Ashwin

ரிட்டயர்டு ஆனபிறகு ஒரு நல்ல தொழிலதிபராக மிளிர வேண்டும் என்பது அஷ்வினின் ஆசை.

#INDvENG

சிறு வயதிலேயே கிரிக்கெட் ஆர்வம் தொற்றிக்கொண்டாலும், படிப்பிலும் கில்லி. இரண்டையும் குழப்பிக்கொண்டதே இல்லை அஷ்வின்

Ashwin | BCCI