இன்று விண்ணில் பாயும் PSLV-C50... இஸ்ரோவின் கடைசி 2020 மிஷனில் என்ன ஸ்பெஷல்? #PSLVC50

ம.காசி விஸ்வநாதன்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இன்று CMS-01 என்னும் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவவுள்ளது. PSLV-C50 என்னும் ராக்கெட் மூலம் இது விண்ணிற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

PSLV-C50 | Isro

Polar Satellite Launch Vehicle என அழைக்கப்படும் PSLV வகை ராக்கெட் மூலம் நடத்தப்படும் 52-வது மிஷன் இது. இதற்கான கவுன்ட்-டவுன் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதிஷ் தவன் விண்வெளி மையத்தில் நேற்று மதியம் 2.41 மணிக்குத் தொடங்கியது. இன்று மதியம் 3.41 மணியளவில் இது விண்ணில் பாயவுள்ளது.

PSLV-C50 | Isro

இந்த செயற்கைக் கோளானது C-band அலைவரிசை ஸ்பெக்ட்ரமை இந்தியா, அந்தமான் தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வழங்கவுள்ளது. இஸ்ரோ விண்ணிற்கு அனுப்பும் 42-வது செயற்கைக்கோள் இது.

PSLV-C50 | Isro

கடந்த மாதம்தான் PSLV-C49 ராக்கெட் மூலம் EOS-01 என்னும் பூமியைக் கண்காணிக்கும் செயற்கைக்கோளையும் ஒன்பது பிற நாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் ஏவியது இஸ்ரோ.

PSLV-C49 | Isro

PSLV-C49தான் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த வருடம் நடத்தப்பட்ட இஸ்ரோவின் முதல் விண்வெளி மிஷன். இன்று ஏவப்படும் PSLV-C50தான் இந்த ஆண்டில் இஸ்ரோவின் கடைசி மிஷன்.

PSLV-C50 | Isro