இ.நிவேதா
காமத்தில் இது சரியா, இது தவறா எனத் தடுமாற வைக்கிற பல ஐயங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, செக்ஸ் நிலைகள் எனப்படுகிற பொசிஷன்ஸ்.
தாம்பத்ய உறவில் பொசிஷனைப் பொறுத்து, குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போடலாம் அல்லது சீக்கிரம் குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம், ஆர்கஸம் அதிகம் கிடைக்கும் என்பது போன்ற பல்வேறு நம்பிக்கைகள் தம்பதிகளிடம் இருக்கின்றன.
பொசிஷனைப் பொறுத்து குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போட முடியும் என்று சொல்லிவிட முடியாது. உறவின் முடிவில் பிறப்புறுப்புகள் இணைந்து, உயிரணுவும் கருமுட்டையும் இணைந்தால், அது கருவாக உருவாகும்.
அப்படியென்றால், பொசிஷனைப் பொறுத்து சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா என்றால், ஒரேயொரு நிலையில் மட்டும் அது உதவும்.
சிறுநீர்ப்பைக்கும் ஆசன வழிக்கும் இடையில்தான் கர்ப்பப்பை இருக்கும். பெரும்பாலான பெண்களுக்குக் கர்ப்பப்பையானது லேசாக முன்னோக்கி சிறுநீர்ப்பை மீது சாய்ந்திருக்கும். சில பெண்களுக்கு மட்டும் கர்ப்பப்பை பின்னோக்கி சாய்ந்திருக்கும். இதை `Retroverted Uterus' என்போம்.
திருப்தியான தாம்பத்ய உறவு இருந்து, கூடவே உடலிலும் எந்தப் பிரச்னையும் இல்லாத சில தம்பதிகளுக்கும் கரு உருவாகாது. அந்தப் பெண்களுக்கு இப்படி கர்ப்பப்பை சற்று பின்னோக்கி சாய்ந்திருக்கலாம்.
அப்படிப்பட்டவர்கள், மிருகங்கள் போல பின்புறமாக இருந்து உறவு கொண்டால் கரு தங்க வாய்ப்பிருப்பதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
மற்றபடி, அவரவர் விருப்பப்படி முன்புறமோ, பின்புறமோ, ஒருக்களித்து அணைத்தவாறோ, ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்தபடியோ எனத் தம்பதியர்க்கு எது விருப்பமான பொசிஷனாக இருக்கிறதோ, அப்படி உறவு கொள்ளலாம்.
பொசிஷன்கள் இருவருக்கும் செளகர்யமாக இருக்க வேண்டும், அவ்வளவுதான். ஆண் மேற்புறமாக இருக்கையில், பெரும்பாலான பெண்கள் உச்சக்கட்டம் அடைவதில்லை.
இதுவே பெண் மேற்புறமாக இருந்தால் இருவருக்குமே உச்சக்கட்டம் கிடைக்கும். பொசிஷன்களில் இதுதான் பெஸ்ட். ஏனென்றால், இதன்மூலம்தான் பெண்ணின் முழு பெண்ணுறுப்பையும் தூண்டி, இருவரும் உச்சக்கட்டத்தை அனுபவிக்க முடியும்.
செக்ஸில் ஆண் - பெண் சமநிலை இந்த பொசிஷனில்தான் இருக்கிறது. இதை ஆண்கள் அனைவரும் புரிந்து, ஏற்றுக்கொள்ள வேண்டும்.