ஓரல் செக்ஸ்: பெண்களின் விருப்பம், வெறுப்பு என்ன? I #VisualStory

இ.நிவேதா

காதலோ, காமமோ பெண்ணுக்கு நாணம் போலவே, சில விருப்பு வெறுப்புகளும் உண்டு. உறவுக்கு முந்தைய விளையாட்டுகள் அவள் விருப்பத்துக்குரியவையாக இருக்கின்றன.

Couple | Unsplash

விருப்பமின்மையை பொறுத்தவரை, ஓரல் செக்ஸ் பல பெண்களால் விரும்பப்படுவதில்லை என்கிறார் மனநல மருத்துவர் ஷாலினி.

Sad woman(Representational image) | Pexels

``பரஸ்பர பகிர்தலுடன் நடக்கும் உறவில், பெண்களுக்கு இந்த வெறுப்பு ஏற்படுவதில்லை. அதுவே, பெண்ணை ஓரல் செக்ஸுக்கு கட்டாயப்படுத்தும்போது இந்த வெறுப்பு ஆரம்பிக்கிறது.

Angry

மனைவியுடன் உறவு கொள்ளும் விருப்பம் வந்தவுடன், ஆணுக்கு 5 நிமிடத்திலிருந்து 10 நிமிடங்கள் வரைக்கும் ஆணுறுப்பில் விறைப்பு ஏற்படும். அபூர்வமாக ஒரு சிலருக்கு 30 நிமிடங்கள் வரைக்கும்கூட விறைப்பு இருக்கலாம்.

Couple (Representational Image) | Photo by Loc Dang from Pexels

இந்த 10 நிமிடங்கள் மட்டுமே தன்னுடைய வேலையென்று ஆண் நினைக்கிறான். அந்த 10 நிமிடங்களுக்கு முன்னால், `உன்னுடன் நான் உறவுகொள்ள, எனக்கு மூட் வருகிற அளவுக்கு நீ செக்ஸியாக இருக்க வேண்டும்’ என்கிற எண்ணம் இன்றைய இளம் கணவர்களிடம் அதிகரித்து வருகிறது.

Couple (Representational Image) | Photo by Jonathan Borba from Pexels

மேலைநாடுகளில் இருந்து வந்த இந்த மனப்பான்மை இப்போது இங்கும் வந்திருக்கிறது. காரணம், பார்ன் மூவிஸ் பார்ப்பதுதான். கூடவே, இன்றைய ஆண்கள் மத்தியில் ஓரல் செக்ஸ் மீதும் விருப்பம் அதிகரித்திருக்கிறது.

Porn Movies (Representational Image) | pixabay

பிறப்புறுப்புகள் இணைவதில் அவர்களுக்கு ஆர்வம் குறைந்திருக்கிறது. மனைவியை ஓரல் செக்ஸ் செய்யச் சொல்லி வற்புறுத்துதல் அதிகரித்திருக்கிறது.

Couple | Photo by Womanizer Toys on Unsplash

ஒரு விஷயம் தெரிந்துகொள்ளுங்கள். பெரும்பாலான பெண்கள் ஓரல் செக்ஸை விரும்புவதில்லை. கணவரின் வற்புறுத்தலுக்காகவே அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Couple | Image by Free-Photos from Pixabay

ஓரல் செக்ஸில் பரஸ்பரம் இருக்கும்போது, அது இருவருக்கும் இனிய உறவாக அமையும். ஆனால், பல ஆண்கள் அதையும் செய்வதில்லை.

Woman (Representational Image) | Photo by Nicolas Postiglioni from Pexels

இதுதொடர்பான மன உளைச்சலுடன் கவுன்சலிங் வருகிற பெண்களின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்திருக்கிறது" என்கிறார் மருத்துவர்.

Doctor | Photo by Matheus Ferrero on Unsplash