உறவின்போது காண்டம் கிழிந்தால் உடனடியாகச் செய்ய வேண்டியது இதுதான்! | #VisualStory

இ.நிவேதா

தாம்பத்ய உறவு தொடர்பான பிரச்னைகளை வெளியே சொல்வதற்குப் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் தயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

pixabay

தீர்வு தேட வேண்டிய விஷயங்களுக்கே தயங்குகிற இவர்கள், உறவின்போது காண்டம் கிழிந்துவிடுவதைப் பற்றியோ, காண்டம் கிழிந்து பெண்ணுறுப்பின் உள்ளே தங்கிவிடுவது பற்றியோ மருத்துவரிடம்கூட பகிர மாட்டார்கள். 

pixabay

ஆனால் மனதுக்குள், `காண்டம் கிழிஞ்சதால குழந்தை உண்டாகிவிடுமோ', `கிழிஞ்சு உள்ள போனது வெளியே போயிடுச்சா; இல்ல உள்ளே சின்ன துண்டு ஏதாவது இருக்குமா' என்று பலவாறாக யோசித்து பயந்துகொண்டே இருப்பார்கள். 

pixabay

குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடுவதற்கும், தடுப்பதற்கும் தம்பதி காண்டம் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான், உறவின்போது காண்டம் கிழிந்துவிட்டால் பெரும்பாலான தம்பதி பதறிவிடுகிறார்கள்.

pixabay

இதற்கு அவசியமே இல்லை. உடனடியாக, கருத்தரிப்பு நிகழாமல் தடை செய்கிற கருத்தடை மாத்திரையை (emergency contraceptive pill) சாப்பிட்டாலே போதும். 

pixabay

அறிமுகமில்லா நபர்களுடன் உறவுகொள்ளும்போது காண்டம் கிழிந்தால்தான் பயப்பட வேண்டும். ஏனென்றால், அது இருபதுக்கும் மேற்பட்ட பால்வினை நோய்கள் வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திவிடலாம்.

pixabay

இப்படிப்பட்ட சூழலில், உறவில் ஈடுபட்ட இருவரும் உடனடியாகத் தங்கள் பிறப்புறுப்புகளை நான்கைந்து முறை சோப் நீரால் நன்கு சுத்தம் செய்துவிட வேண்டும். இது கிருமித்தொற்று ஏற்படுவதை ஓரளவுக்குத் தடுத்துவிடும். 

pixabay

அடுத்து, இருவரும் ஹெச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ளலாம். அதில் எந்த பிரச்னையும் இல்லையென்பது உறுதியாகிவிட்டால், மற்ற பால்வினை நோய்கள் வராமல் தடுப்பதற்கான மாத்திரைகளை ஒரு மாதம் வரை சாப்பிட வேண்டும்.

ஒருவேளை இருவரில் ஒருவருக்கு ஹெச்.ஐ.வி இருப்பது உறுதியானால், இன்னொருவர், உறவுகொண்ட 72 மணி நேரத்துக்குள் ஹெச்.ஐ.வி தடுப்பு மருந்தை எடுத்து, தொடர்ந்து ஒரு மாதம் வரைக்கும் எடுத்துக்கொள்ள வேண்டும். 

pixabay

உறவு கொள்ளும்போது காண்டம் கிழிந்து பெண்ணுறுப்பின் உள்ளே தங்கிவிட்டால், இதற்கும் அச்சப்படத் தேவையில்லை. ஏனென்றால், அது உடலுக்குள்ளே சென்றுவிடாது; உள்ளேயே தங்கியும் விடாது. சிறுநீர் கழிக்கும்போதே வெளியேறிவிடும்.

pixabay

ஒருவேளை அப்படியும் வரவில்லையென்றால், விரலைப் பயன்படுத்தியே எடுத்துவிடலாம். இந்த முறையிலும் வரவில்லையென்றால், பதறாமல் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள். அவர் ஃபோர்செப்ஸ் போன்ற கருவியின் மூலம் அதை நீக்கிவிடுவார். 

pixabay

சிலர், காண்டம் கிழிந்துவிட்டால் அதிலிருக்கும் சின்னத்துண்டு ஏதாவது உள்ளே சென்றிருக்குமோ என்று பயந்துவிடுகிறார்கள்.

pixabay

காண்டத்தை செக் செய்தாலே அது கிழிந்து மட்டுமே உள்ளதா, அல்லது அதன் சிறு பகுதி காணாமல் போயிருக்கிறதா என்பதைக் கண்டறிந்துவிட முடியும்.

pixabay