வளைந்த ஆணுறுப்பு; இயல்பானதா, மருத்துவரிடம் செல்ல வேண்டுமா? #VisualStory

இ.நிவேதா

பலரும், ஆணுறுப்பு 90 டிகிரியில் நேராக இருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அப்படியிருக்க வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை. 

மாதிரிப்படம் | pixabay

ஆண் உறுப்பு மேல் நோக்கி, கீழ் நோக்கி, வலது அல்லது இடது பக்கம் நோக்கி என லேசாக வளைந்துதான் இருக்கும். இந்த வளைவுகள் எல்லாம் இயல்பானவையே. 

pixabay

ஆனால், ஆங்கில எழுத்து `எல்' மாதிரியோ, `எஸ்' மாதிரியோ வளைந்திருந்தால் அது `பைரோனி' (Peyronie) என்கிற நோய். இயல்பான வளைவா, பைரோனி நோயா என்பதை சில அறிகுறிகள் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம்.

வளைந்த ஆணுறுப்பை கொண்டவர்கள், தங்கள் உறுப்பைத் தொட்டுப்பார்த்தால் உள்ளே கட்டிபோல இருப்பதை உணர்கிறார்களா என்று பார்க்க வேண்டும். அப்படி இருந்தால், அந்தக் கட்டி `ஃபைப்ரோசிஸ்' (fibrosis) ஆக இருக்கலாம்.  

pixabay

ஆணுறுப்பு வளைந்திருந்தால், அதன் நீளம் குறைவாக இருக்கும். விறைப்புத்தன்மை அடையும்போது சுரீரென்று வலிக்கும். விறைப்புத்தன்மையில் பிரச்னை என்றால் ஆண்மைக் குறைபாடும் ஏற்படலாம். இதுவே பிரச்னையில்லாத வளைவு என்றால், ஆணுறுப்பினுள்ளே கட்டி எதுவும் இருக்காது.

pixabay

பைரோனியை முற்றிலும் சரிசெய்ய முடியும். அறுவைசிகிச்சை செய்து கட்டியை நீக்குவது முதல் தீர்வு.  

கட்டியின் மீது ஊசி வழியாக 12 முறை, அதற்கான கால இடைவெளியுடன் மருந்தைச் செலுத்துவதன் மூலம் கட்டியைக் கரைக்கலாம். இந்த 12 ஊசிகளுக்கு 3.50 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இது இரண்டாவது தீர்வு. மூன்றாவதாக, அந்தக் கட்டியை அதற்கென்று இருக்கிற கருவி மூலம் கரைத்துவிடலாம்.

ஆணுறுப்பு லேசாகத்தான் வளைந்திருக்கிறது என்றால், உள்ளாடை அணியும்போது, ஆணுறுப்பு எந்தப் பக்கம் வளைந்திருக்கிறதோ அதற்கு எதிர்ப்பக்கமாக ஆணுறுப்பை ஒதுக்கி உள்ளாடை அணிய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்தால் அந்த வளைவு சரியாவதற்கான வாய்ப்பிருக்கிறது.

pixabay

ஆணுறுப்பில் வளைவு கொண்டவர்கள் அத்தனை பேரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ரொம்பவும் வளைந்திருக்கிறது, வலியிருக்கிறது, தாம்பத்திய உறவு கொள்ள முடியவில்லை என்றால் மட்டும் தவறாமல் மருத்துவர் ஆலோசனை பெறவும்.

pixabay