நவ. 25: சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் | #Visual Story

போ.நவீன் குமார்

நவம்பர் 25... சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம். பெண்கள், சிறுமியருக்கு எதிரான வன்முறை உலகம் முழுக்க நிலவிவரும் பிரச்னை. அதனை நீக்கும் நோக்கத்துடன், ஐ. நா. பொதுச்சபை 48/104 தீர்மானத்தை வெளியிட்டது. இது பாலின அடிப்படையிலான வன்முறை இல்லாத உலகத்தை நோக்கிய பாதைக்கு அடித்தளம் அமைக்கும் இலக்கு கொண்டது.

Representational Image | Pixabay

பிப்ரவரி 7, 2000 அன்று ஐ.நா, நவம்பர் 25-ம் தேதியை பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாக தீர்மானம் நிறைவேற்றியது.

UN | Image by Edgar Winkler from Pixabay

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையில் வெறுப்பு பேச்சு, பாலியல் கொடுமை, இணையவழி துன்புறுத்தல் எனப் பல வகை வன்முறைகள் உள்ளன.

பெண் கொடுமை

இன்று பெண்களின் முன்னேற்றம் நம்பிக்கை தந்தாலும், இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியுள்ளது. ஐ.நா அறிக்கைபடி, தற்போது வரை 49 நாடுகளில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் இல்லை.

Justice | Vikatan

இன்றுவரை, மூன்றில் இரண்டு நாடுகளில் மட்டுமே குடும்ப வன்முறை என்பது சட்டத்திற்குப் புறம்பானதாக உள்ளது. உலகளவில் 37 நாடுகளில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் வழிவகை உள்ளது.

பாலியல் வன்கொடுமை | சித்திரிப்பு படம்

ஐ.நா. சபையின் 2021 அறிக்கையின்படி, உலகில் 45% பெண்கள் தங்களுக்குத் தெரிந்த நபர்களால் வன்முறைக்கு உள்ளாகின்றனர்.பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தல் மோசமாகிவிட்டதாக, 10-ல் 6 பேர் தெரிவித்துள்ளனர்.

Abuse | pixabay

இந்தியாவில், 2020-ம் ஆண்டைவிட 2021-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் 15.3% அதிகரித்துள்ளதாக இந்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகம்

சமீபத்தில்கூட ‘உலகில் ஒவ்வொரு 11 நிமிஷத்துக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி அவரது குடும்ப உறுப்பினர்/இணையரால் கொல்லப்படுகிறாா்’ என்று ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்தாா்.

United Nations Secretary-General António Guterres | Bebeto Matthews

பெண்கள் மீதான வன்முறையை தடுக்க, இக்குற்றங்களை சரிசெய்ய ஒவ்வொரு தனி நபரும் முன்வர வேண்டும். தனிநபர் மாற்றமே, சமுதாய மாற்றம். பெண்களை பாதுகாப்போம்!

மகளிர் நலன்