தினம் தினம் திருநாளே! - இன்றைய ராசிபலன்

சைலபதி

அதிர்ஷ்டம்: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர உறவுகளால் ஆதாயம் ஏற்படும். செலவுகள் ஏற்பட்டாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். பணவரவு உண்டு. - பெஸ்ட் ஆஃப் லக்

ஆரோக்கியம்: உணவு விஷயங்களில் கவனம் தேவை. சின்னச் சின்ன வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படலாம். இன்று பொறுமையாகச் செயல்படுவதும் அவசியம். - ஹெல்த் இஸ் வெல்த்

நிதானம்: செயல்களில் நிதானம் தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவதன் மூலம் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைக்கும். - விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை!

மகிழ்ச்சி: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். நம்பிக்கை அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் செயல்களில் அதிக கவனம் தேவை. - என்ஜாய் தி டே!

செலவு: மகிழ்ச்சியான நாள். முயற்சிகள் அனைத்தும் சாதகமாக முடியும். என்றாலும் செலவுகள் அதிகரித்த வண்ணம் இருக்கும். உணவிலும் கட்டுப்பாடு அவசியம். - செலவே சமாளி!

பொறுமை: முடிவுகள் எடுக்கும் முன்பாக பல முறை ஆலோசிக்க வேண்டியது அவசியம். செயல்களில் பொறுமை தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!

உற்சாகம்: மனதில் உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். - ஆல் இஸ் வெல்

அனுகூலம்: எதிர்பாராத பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்திருக்கும். சிலருக்கு நண்பர்களிடமிருந்து எதிர்பாராத பரிசுகள் கிடைக்கலாம். - ஜாலி டே!

அலைச்சல்: மகிழ்ச்சியான நாள். குடும்பத்தினர் அன்புமழை பொழிவார்கள். சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றச் சிறிது அலைச்சலை மேற்கொள்ள வேண்டியிருக்கும். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

கவனம்: அவசரமில்லாமல் செயல்பட வேண்டிய நாள். செலவுகளும் அதிகரிக்கும். உறவினர்களிடம் பேசும்போது சொற்களில் கவனம் தேவை. வார்த்தைகளால் வம்புவரலாம். - நா காக்க!

விவாதம்: தேவையற்ற குழப்பங்கள் மனதில் அலைமோதும். அன்றாடப் பணிகளில் கவனம் செலுத்துங்கள். விவாதங்களை முற்றிலும் தவிருங்கள். இறைவழிபாடு அவசியம். - நோ ஆர்கியுமென்ட்ஸ்

கலகலப்பு: எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் கலகலப்பும் நிறைந்திருக்கும். புதிய முயற்சிகளைத் துணிந்து மேற்கொள்ளலாம், வெற்றியாகும். - ஆல் தி பெஸ்ட்!