தினம் தினம் திருநாளே! - இன்றைய ராசிபலன் - 16.1.2021

சைலபதி

பொறுமை : செயல்கள் அனுகூலமாகும். சகோதர உறவுகளால் செலவுகள் ஏற்படும். உறவினர்களால் சிறு பிரச்னை ஏற்பட்டு நீங்கும். - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்

உற்சாகம் : குடும்பத்தில் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். சிலர் குடும்பத்துடன் இறைவழிபாட்டில் ஈடுபடுவீர்கள். - ஆல் இஸ் வெல்

அலைச்சல் : தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம் என்பதால் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. செலவுகள் அதிகரிக்கும் என்பதால் சிக்கனம் தேவை. கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. - ரிலாக்ஸ் ப்ளீஸ்

பணவரவு : எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். - ஜாலி டே

மகிழ்ச்சி : குடும்பத்தோடு மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். நண்பர்கள் உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். செலவுகள் ஏற்பட்டாலும் பணவரவும் இருக்கும். - என்ஜாய் தி டே

தெளிவு : நேற்றுவரையிருந்த சோர்வும் அசதியும் நீங்கும். உற்சாகமாக இருப்பீர்கள். குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்ற முயல்வீர்கள்.- நாளை உங்க நாள்!

கவனம் : செலவுகள் அதிகரிக்கும். என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். சகோதரர்களிடம் பேசும்போது பேச்சில் கவனம் தேவை. வார்த்தைகளால் வம்பு வரலாம். - நா காக்க

நன்மை : உறவினர்களால் நன்மையும் ஆதாயமும் உண்டாகும். உங்கள் ஆலோசனையை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். சிலர் சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். - நாள் நல்ல நாள்

துணிவு : முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். அதனால் நன்மைகள் உண்டாகும். சிலருக்குப் புதிய ஆடைகள் சேரும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். - துணிவே துணை

பணிச்சுமை : பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் சோர்வும் அசதியும் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும். சிலருக்குப் பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத சுபச்செய்தி ஒன்று தேடிவரும். - உழைக்கும் கரங்கள்!

நம்பிக்கை : குழப்பங்கள் நீங்கும். மனதில் தெளிவும் நம்பிக்கையும் உண்டாகும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். உறவுகளால் ஆதாயம் உண்டாகும். - நம்பிக்கை அதானே எல்லாம்!

பக்தி : மனதில் இறைச்சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த வருத்தங்கள் நீங்கி உற்சாகமாவீர்கள். வீட்டில் மகிழ்ச்சியும் பாசமும் நிறைந்திருக்கும். - இறைவன் இருக்க பயம் ஏன்?!