தினம் தினம் திருநாளே! - இன்றைய ராசிபலன் - 18.1.2021

சைலபதி

துணிவு : முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அதனால் நன்மையே ஏற்படும். உங்கள் மீதான விமர்சனங்களுக்கு பதில் சொல்வீர்கள். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். - துணிவே துணை

சாதகம் : முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர உறவுகள் அனுகூலமாக இருப்பார்கள். சிலர் தேவைக்குப் புதிய ஆடைகள் வாங்குவீர்கள். பணவரவும் உண்டு. - சாதகமான ஜாதகம் இன்று

ஆதாயம் : உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவும் உண்டாகும். குடும்பத்தினர் ஆரோக்கியத்தில் மட்டும் சிறிது அக்கறை தேவை. - பெஸ்ட் ஆஃப் லக்!

பொறுமை : சொல்லிலும் செயலிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். வார்த்தைகளில் கவனம் தேவை. இறைவழிபாடு நன்மையைத் தரும். - எல்லாம் அவன் செயல்!

கவனம் : அனைத்து விஷயங்களிலும் கூடுதல் கவனம் தேவை. சின்னச் சின்னக் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் சிக்கனம் தேவை. - டேக் கேர் ப்ளீஸ்

செலவு : செலவுகள் அதிகரித்த வண்ணம் இருக்கும். கையிருப்பு கரையும். சகோதர உறவுகளால் சிறு பிரச்னை ஏற்பட்டு நீங்கும். அமைதியாகச் செயல்பட்டு வெற்றிபெறுவீர்கள். -செலவே சமாளி!

அனுகூலம் : குழப்பங்கள் நீங்கும். செயல்கள் அனுகூலமாக முடியும். பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தினர் உங்களுக்கு ஒத்தாசையாக இருப்பார்கள். - ஆல் இஸ் வெல்

அன்பு : சிலருக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் அன்பும் பாசமும் நிறைந்திருக்கும். -குடும்பம் ஒரு கதம்பம்!

நிதானம் : வார்த்தைகளால் வம்புவரலாம் என்பதால் வீட்டிலும் வெளியிலும் பேசும்போது நிதானம் தேவை. பணவரவு காணப்பட்டாலும் செலவுகள் அதைவிட அதிகமாக இருக்கும். - கேர் ஃபுல் ப்ளீஸ்

உற்சாகம் : காலை முதலே உற்சாகமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதர உறவுகளிடம் இனிமையாகப் பேசுவதன் மூலம் வருத்தங்களைத் தவிர்க்கலாம். - ஆல் தி பெஸ்ட்

ஆரோக்கியம் : அனைத்துவிஷயங்களிலும் அனுகூலமான பலன்கலே ஏற்படும் என்றாலும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளி உணவால் அலர்ஜி, அஜீரணம் ஏற்பட வாய்ப்புண்டு. - ஹெல்த் இஸ் வெல்த்

நன்மை : பிற்பகலுக்கு மேல் முக்கியப் பணிகளைத் தொடங்கலாம். குடும்பத்தினரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நன்மைகளைத் தரும். செலவுகள் அதிகரிக்கும். - நாள் நல்ல நாள்!