தினம் தினம் திருநாளே! - இன்றைய ராசிபலன் - 17.1.2021

சைலபதி

வெற்றி : எதிர்பாராத பணவரவு உண்டாகும். முயற்சிகளுக்குக் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். மூத்தவர்களின் ஆலோசனை கேட்டுச் செய்யும் செயல்கள் வெற்றியாகும். - வெற்றிக்கொடிகட்டு

அனுகூலம் : செயல்கள் அனுகூலமாகும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி வந்துசேரும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். - இனி எல்லாம் சுபமே!

விவாதம் : செலவுகள் அதிகரித்தாலும் பணவரவு இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வீட்டிலும் வெளியிலும் பேச்சில் கவனம் தேவை. விவாதங்களைத் தவிர்த்துவிடுங்கள். - நோ ஆர்கியுமென்ட்ஸ் ப்ளீஸ்

தாமதம் : மனதில் இனம் புரியாத சோர்வு ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும் பணவரவு தாமதமாகும். உறவினர்கள் விஷயத்தில் கவனம் தேவை. - தாமதமாகலாம் ஆனால் தடைப்படாது!

பணிச்சுமை : பணிச்சுமை அதிகரிப்பதால் ஓய்வின்றி வேலை செய்ய வேண்டியிருக்கும். தந்தை வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். பிற்பகலுக்கு மேல் அசதியும் சோர்வும் உண்டாகும். - உழைக்கும் கரங்கள்!

நன்மை : சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்புண்டு. தேவையான பொருள்களை வாங்குவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். - நாள் நல்ல நாள்

அலைச்சல் : முயற்சிகள் சாதகமாக முடியும். செலவுகள் ஏற்பட்டாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற அலைச்சலை மேற்கொள்வீர்கள். - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்

மகிழ்ச்சி : வழக்கமான பணிகளைக் கூடுதல் கவனத்தோடு செய்துவாருங்கள். சிலருக்குச் செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் நாள் முழுவதும் மகிழ்ச்சியே நிறைந்திருக்கும். - என்ஜாய் தி டே!

உற்சாகம் : காலை முதலே உற்சாகமாகச் செயல்படுவீர்கள். நீண்டநாள்களாக இழுபறியாக இருந்த பணம் கைக்குவரும். குடும்பத்தினர் உங்கள் மனம் மகிழுமாறு நடந்துகொள்வார்கள். - ஜாலி டே!

நிதானம் : பணவரவு காணப்பட்டாலும் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தினர் பாசமழை பொழிவார்கள். பேச்சில் மட்டும் நிதானம் தேவை. வார்த்தைகளால் வம்பு வரலாம். - நா காக்க!

நற்செய்தி : முற்பகலில் சோர்வும் பிற்பகலில் உற்சாகமும் ஏற்படும் நாள். எதிர்பாராத நற்செய்திகள் வந்து சேரும். கடன்கள் விஷயத்தில் உரிய கவனம் தேவை. - ஆல் தி பெஸ்ட்

பொறுமை : சொல்லிலும் செயலிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். செலவுகள் அதிகரிக்கும். நண்பர்கள் உதவிக்கு வருவார்கள். அவர்களால் அனுகூலம் உண்டாகும். - ரிலாக்ஸ் ப்ளீஸ்