தினம் தினம் திருநாளே! - இன்றைய ராசிபலன்

சைலபதி

உற்சாகம்: மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் மனம் மகிழும் படி நடந்துகொள்வார்கள். மகிழ்ச்சியான நாள். - ஆல் தி பெஸ்ட்

பொறுமை: நிதானமாகச் செயல்படுங்கள். பணிச்சுமை அதிகரிப்பதால் அசதி ஏற்படும். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்துப்போவது நன்மை தரும். - ரிலாக்ஸ் ப்ளீஸ்

குழப்பம்: சின்னச் சின்னக் குழப்பங்கள் தோன்றி மறையும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது பெரியவர்களிடம் ஆலோசியுங்கள். கைப்பொருளில் கவனம் தேவை. - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்

அனுகூலம்: செயல்களில் அனுகூலம் ஏற்படும். பிற்பகலில் தொடங்கும் முயற்சிகள் சாதகமாகும். நண்பர்களிடம் கேட்டிருந்த உதவிகள் கிடைக்கும். நல்ல நாள். - என்ஜாய் தி டே

வெற்றி: செயல்களில் வெற்றியே ஏற்படும். எதிர்பார்த்த பொருள்வரவுக்கும் வாய்ப்புண்டு. மறைமுக எதிரிகளை அடையாளம் காண்பீர்கள். லாபகரமான நாள் - ஆல் இஸ் வெல்

தாமதம்: செயல்களில் தாமதம் ஏற்படும் என்றாலும் சாதகமாக முடியும். ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. சிறு பிரச்னை ஏற்பட்டு நீங்கும். - தாமதமாகலாம் ஆனால் தடைப்படாது!

நம்பிக்கை: தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் செயல்களுக்கு ஒத்தாசையாக இருப்பார்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்புண்டு. - நம்பிக்கை அதுதானே எல்லாம்!

செலவு: பண வரவு காணப்பட்டாலும் செலவுகளும் அதிகரிக்கும். சொற்களிலும் சிக்கனம் தேவை. வார்த்தைகளால் வம்பு வரலாம் என்பதால் பொறுமை அவசியம். - செலவே சமாளி!

மகிழ்ச்சி: குடும்பத்தினர் அன்பு மழை பொழிவார்கள். புதிய வாய்ப்புகள் தேடிவரும். குடும்பத்தினர் குறித்த மகிழ்ச்சியான செய்திகள் தேடிவரும். - ஜாலி டே

அன்பு: குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். ஒருவருக்கொருவர் அன்புடன் நடந்து கொள்வார்கள். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். - பெஸ்ட் ஆஃப் லக்!

மரியாதை: செயல்கள் அனுகூலமாக முடியும். உங்கள் பொறுப்புகளைக் குடும்பத்தினர் பகிர்ந்துகொள்வார்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் ஆலோசனைகள் பாராட்டப்படும். - திறமைக்கு மரியாதை!

ஆதாயம்: சகோதர உறவுகள் உதவி கேட்டு வருவார்கள் என்றாலும் பிற உறவினர்களால் ஆதாயம் ஏற்படும் நாள். எதிர்பாராத பணவரவும் பொருள் சேர்க்கையும் உண்டாகும். - நாள் நல்ல நாள்!