தீபாவளி பண்டிகை வரலாற்றில் எப்படியெல்லாம் வழங்கப்படுகிறது? சுவாரஸ்யத் தகவல்கள்! | Visual Story

மு.ஹரி காமராஜ்

கிருத யுகத்தில் கேதார கௌரி விரதமாகவும், திரேதா யுகத்தில் ஸ்ரீராமர் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய நாளாகவும், துவாபர யுகத்தில் தீபாவளி என்றும் கொண்டாடப்படுகிறது.

தீபாவளி நோன்பு பிறந்த கதை

திருமகள் அலைகடலில் இருந்து தோன்றிய நாள் என்பதால் தீபாவளியில் லட்சுமி வழிபாடும், குபேர வழிபாடும் நடைபெறுகின்றன

தீபாவளி தரிசனம்

பேரரசன் விக்கிரமாதித்யன் உஜ்ஜயினியில் ஒரு தீபாவளி நாளில் பட்டம் ஏற்றுக் கொண்டான் என்றும் அதுவே பீகாரில் தீபாவளி விழாவானது என்றும் கூறப்படுகிறது.

தீபாவளி

மகாவீரர் தீபாவளி நாளில் முக்தி அடைந்ததால் இது தீபாவளிகா என்று ஜைனர்களால் கொண்டாடப்படுகிறது.

மகாவீரர்

பூமியின் குழந்தை என்ற பொருளில் பவுமன் என்ற பெயர் கொண்டவன் நரகாசுரன். இவன் ஆட்சி செய்த பிராக்ஜோதிஷபுரம் அசாம் மாநிலத்தில் உள்ளது.

தீபாவளி

சீக்கியர்கள் தங்கள் ஆறாவது குருவான குரு ஹர்கோபிந் ஒரு தீபாவளி நாளில் விடுதலையான மகிழ்ச்சியை விளக்கேற்றிக் கொண்டாடினார்கள்.

பொற்கோயில் | pixabay

9-ம் நூற்றாண்டில் ராஷ்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணன் தீபாவளிக்கு எண்ணெய் தானம் வழங்கிய செய்தியை கர்நாடக சவுந்தட்டி (Saundatti) கல்வெட்டு கூறுகிறது.

கல்வெட்டு

திருப்பதி வேங்கடாசலபதி கோயில் கி.பி.1542-ம் ஆண்டு கல்வெட்டு ஒன்றில், ‘திருப்பதி வேங்கடவனுக்கு தீவாளி நாள் அதிரசப்படி இரண்டு’ என்ற தகவல் உள்ளது.

திருமலை திருப்பதி

காஞ்சி வரதர் கோயிலில் உள்ள 1558-ம் ஆண்டு கல்வெட்டு ஒன்றும் விழாக்களின் பட்டியலில் தீவளிகை என்று இந்த விழாவைக் குறிப்பிடுகிறது.

வரம் தந்த வரதர்!

திருவாரூர் மாவட்ட சித்தாய்மூர் பொன்வைத்த நாதருக்கு தீபாவளி அபிஷேக விழா நடைபெற்றதை கி.பி.1753-ம் ஆண்டு செப்பேடு ஒன்று தெரிவிக்கிறது.

தீபாவளி

சக்தி விகடனின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

விகடன் தீபாவளி