`வள்ளலார் எனும் ஆன்மிகப் புரட்சியாளர்' - 200 வது பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!

மு.ஹரி காமராஜ்

கடலூர் மாவட்டம் வடலூர் அருகில் இருக்கும் மருதூரில் 1823-ம் ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி, ராமையாப்பிள்ளை, சின்னம்மை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் ராமலிங்கம்.

வள்ளலார்

சிறுவயது முதலே தெய்வ பக்தியில் திளைத்த ராமலிங்கம், ஸ்தோத்திரப்பாடல்கள் பாடி மகிழ்ந்தார். இவரே இவரே பின்னாளில் வள்ளலார் என போற்றப்பட்டார்.

வள்ளலார்

கருணை ஒன்றே இறைவனை அடைய போதுமான சாதனம் என்றார். ஜீவகாருண்யத்தால் மட்டுமே இறை நிலையை எட்ட முடியும் என்றார்.

வள்ளலார் பிறந்த நாள்

‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி; தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி' என்று அருள் எனும் இறை ஒளி, பெரும் எனும் ஜீவ ஒளி, ஜோதி எனும் உள்ளொளிப் பெருக வழி செய்தார்.

வள்ளலார் தரிசனம்!

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் 1874 ஜனவரி 30-ம் தேதி வடலூர் மேட்டுக்குப்பத்தில் ஒரு அறையினுள் காற்றினில் கரைந்தார்.

வள்ளலார் காட்டிய வழிபாடு!

'கருணை இல்லாத பக்தி அவசியம் இல்லை. சாதி சமய ஆச்சாரங்களை விட்டு ஒழியுங்கள், அதுவே சுத்த சன்மார்க்கம்' என்கிறார் வள்ளலார்.

‘வள்ளலார் மகிமை’

திருவருட்பிரகாச வள்ளலார் எனப்படும் இவர் வாழ்வியல், சமூக நீதி, அறிவியல், ஆன்மீகத்தில் புரட்சி கண்ட மெய்ஞானி. சாதி சமய ஒழிப்பை 19ம் நூற்றாண்டிலேயே கண்டவர்.

வள்ளலார்

பெண்களுக்கு கல்வி, ஆண்-பெண் சமத்துவம், முதியோர் கல்வி, விதவை சடங்குகளை மறுத்தல், கருணை இல்லா நிலையை கண்டித்தல், அன்னதானம் எனப் பல சமூகப் புரட்சியை செய்தவர்.

வள்ளலார்

திருக்குறள் வகுப்புகளை முதன்முதலாக நடத்தியவர். தமிழ் வளர்ச்சியிலும், இயற்கை வாழ்விலும், உணவுக் கட்டுப்பாடு, மூலிகை வைத்தியத்தில் பெரும் விருப்பம் கொண்டவர்.

அருட்பிரகாச வள்ளலார்

இவர் இயற்றிய சுமார் 6000 பாடல்களின் திரட்டு, திருவருட்பா எனப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது.

வள்ளலார்

‘சமூக சீர்திருத்தத்தின் தந்தை’ என்று பாரதி இவரைப் போற்றியுள்ளார். இவரது வழித்தடத்தில் பயணித்தவர்களாக சட்டம்பி சுவாமிகள், நாராயண குரு போன்றோர் போற்றப்படுகின்றனர்.

வள்ளலார் பிறந்த நாள்

முதல் கல்வெட்டாராய்ச்சியாளர், கவிஞர், நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், பத்திரிகையாசிரியர், சித்த மருத்துவர், சொற்பொழிவாளர் எனப் பன்முகம் கொண்டவர் வள்ளலார்.

வள்ளலார்

காலங்களைக் கடந்த அருள் ஞானி வள்ளலாரின் 200-வது பிறந்த தின துவக்க நாள் இன்று!

வள்ளலார் தரிசனம்!