நந்தியை வணங்கினால் கிடைக்கும் நன்மைகள்|Visual Story

மு.ஹரி காமராஜ்

அதிகாரன், சிவப்ரியன், ருத்திரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்க ப்ரியன், கணவேந்தன், சிவ வாகனன், கருணாகர மூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன் என்றெல்லாம் நந்தியெம்பெருமானுக்கு திருநாமங்கள் உள்ளன.

நந்திதேவர், பஞ்சாட்சரத்தின் வடிவமானவர். நான்கு வேதங்களையும் நான்கு பாதங்களாகக் கொண்டவர் நந்திதேவர். கயிலாய பரம்பரை குருமார்களின் ஆதி குருவானவர் நந்தியெம்பெருமானே!

எந்நேரமும் ஈசனின் சந்நிதியிலேயே இருப்பவர் நந்தி. எனவே நந்தியிடம் நாம் வைக்கும் பிரார்த்தனைகளை தக்க நேரத்தில் அவர் ஈசனிடம் எடுத்துரைத்து நலம் அருள்வார் என்பது நம்பிக்கை.

விநாயக நந்தி, மகா நந்தி, சோம நந்தி, பத்ம நந்தி, நாக நந்தி, சூரிய நந்தி, கருட நந்தி, விஷ்ணு நந்தி, சிவ நந்தி என்ற நவ நந்திகளையும் நந்தியால், ஸ்ரீசைலம் ஆகிய திருத்தலங்களில் தரிசிக்கலாம்.

ஈசனுக்கு எதிரில் நெருக்கமாக இருக்கும் நந்தி, ‘தர்ம நந்தி'. இந்த நந்தியின் மூச்சு ஈசனின் மீது பட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்பது ஆகம விதி. எனவேதான் நந்திக்கும் ஈசனுக்கும் இடையே செல்லக்கூடாது என்கிறார்கள்.

ஈசன் தனது நேசத்துக்குரிய நந்திக்குத் திருமணம் நடத்த விரும்பி ஊரெங்கும் பெண் தேடினார். இறுதியில் வசிஷ்டரின் பெயர்த்தியான சுயசையைத் தேர்ந்தெடுத்தார்.

நந்தியெம்பெருமான், சுயசையின் திருமணம் பங்குனி மாதம், வளர்பிறை, தசமி, புனர்பூச நட்சத்திரத்தில், திருமழபாடியில் தேவர்கள் புடைசூழ நடைபெற்றது.

பிரதோஷ நாளில் வேண்டும் வரம் தருபவராக விளங்குகிறார் நந்திபகவான். அதனால்தான் பிரதோஷ தினத்தில் நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

காஞ்சிபுரம், விருத்தாசலம், திருவிடைமருதூர், திருவண்ணாமலை போன்ற கோயில்களில் பஞ்ச நந்திகள் உள்ளன. போக நந்தி, வேத நந்தி, ஆத்ம நந்தி, மகா நந்தி, தரும நந்தி என்பன அவை.

பிரதோஷ நாளில் நந்திக்கு காப்பரிசி, அருகம்புல் மாலை போன்றவை அளித்து முறைப்படி தரிசனம் செய்து வழிபட்டால் கடன், வியாதி, அகால மரணம், வறுமை, பாவம், மனத் துயரம் முதலானவை நீங்கும். முக்தி கிடைக்கும்.

நந்தி