ரா.ராம்குமார்
சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒருசேர எழுந்தருளியிருக்கும் திருத்தலம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில்.
'சுசி' என்றால் தூய்மை அடைதல் என்று பொருள். 'இந்திரன்' இங்கு தூய்மை பெற்றதால் இத்தலம் 'சுசீந்திரம்' என்று பெயர் பெற்றது.
மார்கழிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேர்த்திருவிழா நடைபெறுகிறது.
சுசீந்திரம் கோயிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் அருள்பாலிக்கின்றார்.
சுசீந்திரம் கோயில் ஏழு நிலை ராஜகோபுரங்களை கொண்டது.
தேர்திருவிழாவில் பாரம்பர்ய வாத்தியம் இசைக்கும் கலைஞர்கள்.
முகக்கவசம் அணிந்து தேர்திருவிழாவில் கலந்துகொண்ட பெண்கள்.
கோயில் வசந்த மண்டபத்தின் மேற்கூரையில் 12 ராசிகளும், நவகிரகங்களும் உள்ளன.
சுவாமி திருத்தேரைத் தொட்டு வணங்கும் பக்தர்கள்...
தேர்திருவிழாவில் செல்பி எடுத்து மகிழும் பெண்கள்.
மக்கள் வெள்ளத்தில் அசைந்து வரும் விநாயகர் தேர்...
தேரில் பின்னால் அமர்ந்து தேரோடு வலம் வரும் சிறுவர்கள்.
தமிழகத்தில் நிலவிய கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின் நடைபெறும் பிரமாண்ட தேர்த்திருவிழா இதுவாகும்.
சுசீந்திரம் கோயிலில் சித்திரை மாதத்தில் தெப்பத்திருவிழா விமர்சையாக நடைபெறும்.
தேர்திருவிழாவில் பாரம்பர்ய வாத்தியம் இசைக்கும் பெண் பக்தர்கள்...
மக்கள் வெள்ளத்தில் அசைந்து வரும் தாணுமாலயன் சுவாமி திருத்தேர்...
தாணுமாலயன் சுவாமியை பல்லக்கில் சுமந்து வரும் பக்தர்கள்.
தேர்திருவிழாவில் கலந்து கொண்ட மக்கள்...
தேர்திருவிழாவில் பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிந்து கலந்துகொண்டனர்.
பக்தர்கள் சூழ பல்லக்கில் அசைந்து வரும் அம்மன்...