தை அமாவாசை - திதி கொடுக்க 9 புண்ணிய தீர்த்தத் தலங்கள்!

மு.ஹரி காமராஜ்

பவானி கூடுதுறை - தென் திரிவேணி சங்கமமான இங்கு நீராடி பித்ரு காரியங்கள் செய்வது கங்கையில் செய்வதற்கு சமமானது என்பர்.

ராமேஸ்வரம் - இந்தத் தலத்தில் உள்ள 22 தீர்த்தங்களும் பித்ரு தோஷத்தைப் போக்கும் ஆற்றல் கொண்டவை என்பது நம்பிக்கை.

திருப்பூவணம் - காசிக்கு நிகரான இந்தத் தலத்தில் வைகையில் நீராடி திருப்பூவண ஈசரை வழிபட பித்ருக்களின் ஆசி கிட்டும்.

திருப்புல்லாணி - இங்குள்ள ரத்னாகர தீர்த்தத்தில் நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷம்.

திருச்செந்தூர் - இங்குள்ள தென்புலத்தார் தீர்த்தத்தில் தர்ப்பணம் கொடுத்தால் பித்ருக்கள் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது ஐதிகம்.

திருவெண்காடு - இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, ருத்ர பாதம் பிரதிஷ்டை அமைந்துள்ள ஆலமரத்தின் அடியில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பானது. திருவிளமர் - திருவாரூர் கமலாலயதில் நீராடி, விளமல் பதஞ்சலி மனோகரரை வழிபட்டால் பித்ருக்களின் ஆசி கிட்டும்.

திருக்கண்ணபுரம் - இங்குள்ள நித்ய புஷ்கரணியில் நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பானது.

கருங்குளம் - இங்கு தாமிரபரணியில் நீராடி மார்த்தாண்டேசரை வழிபட பித்ரு சாபம் நீங்கும்.

திருச்சி அம்மா மண்டபம் - காவிரியில் நீராடி அம்மா மண்டபத்தில் பித்ரு காரியங்கள் செய்யலாம்.

மேலும் சிவசைலம், ஆழ்வார்குறிச்சி, கடையம், திருப்புடைமருதூர், பாபநாசம், திருவையாறு, திருவிடைமருதூர், மயிலாடுதுறை, சாயாவனம், ஸ்ரீவாஞ்சியம், அவிநாசி, தென்காசி தலங்களும் பித்ரு காரியங்களுக்குச் சிறப்பானவையே.