மழையா? மொபைலை பாதுகாப்பது எப்படி? #VisualStory

இ.நிவேதா

நாம் நனைந்தாலும் பரவாயில்லை, மொபைல் ஈரமாகி விடக் கூடாது என்பதில் பலரும் தெளிவாக இருப்போம். மழையிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள குடை, ரெயின்கோட் உண்டு. அதேபோல் உங்கள் மொபைலுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம்.

உடனடியாக ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள் (Switch off immediately): ஸ்மார்ட்போனை பாதுகாக்க அந்நேரத்தில் வேறு வழி இல்லையெனில் சுவிட்ச் ஆஃப் செய்து பேட்டரியை வெளியே எடுத்துவிடுங்கள். நான்- ரிமூவபிள் பேட்டரி என்றால் ஆஃப் செய்து வைக்கவும்.

ஜிப் லாக்குடன் கூடிய சிலிக்கா ஜெல் (Zip lock with Silica jel): மழைக்காலத்தில் போனை பாதுகாக்க எளிய மற்றும் மலிவான தீர்வு இது. சிலிக்கா ஜெல் ஈரப்பதத்தை உறிஞ்சும், மற்றும் ஜிப் லாக் ஈரப்பதத்திலிருந்து ஸ்மார்ட்போனை பாதுகாக்கும். இவை ஸ்மார்ட்போன்களுக்கு ரெயின் கோட் போல.

பாலிபேக் மற்றும் காகிதம் (Polybag and papers): எந்த யோசனையும் வரவில்லை எனில் முதலில் கைக்குட்டையால் ஸ்மார்ட்போனை முற்றிலும் சுற்றிவிடுங்கள், அதன் மேல் காகிதத்தையும் சுற்றி மூடிவிடுங்கள். பிறகு பாலிபேக் உள்ளே வைத்துவிடுங்கள்.

Representational Image

நீர்புகா பைகள் (Water proof covers): ஸ்மார்ட்போன்களை வாங்கும் போதே நீர்புகா கவரையும் சேர்த்து வாங்கிவிடுங்கள்.

பலூன் (Balloon): ஸ்மார்ட்போனை உள்ளே நுழைப்பதற்கு ஏதுவாக பலூனை பெரிதாக ஊதுங்கள். உள்ளே நுழைத்த பின்பு காற்றை வெளியேற்றிவிடுங்கள்.

இதில் சிக்கல் என்னவென்றால், பலூனின் உள்ளே ஸ்மார்ட்போனை நுழைத்த பிறகு உங்களால் ஸ்மார்ட்போனை உபயோகிக்க முடியாது, மீண்டும் பலூனில் இருந்து வெளியே எடுத்த பிறகே உபயோகிக்க முடியும்.

Mobile phone | Pixabay

Tempered glass: கீறல்கள், கைரேகைகள், உடைதலில் இருந்து மட்டுமல்ல, நீரிலிருந்தும் மொபைலை பாதுகாக்கின்றன டெம்பர்டு க்ளாஸ்கள். மலிவான டெம்பர்டு கிளாஸை உபயோகிக்காதீர்கள்; ஸ்மார்ட்போனின் ஓரங்களில் நீர் உள்ளே செல்லும் வாய்ப்பு உள்ளது.