OnePlus 9RT Quick Review: 10 பாயின்ட்டுகளில் ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

பிரசன்னா ஆதித்யா

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் வெளியான 9R மாடலின், அப்டேட்டேட் வெர்ஷனாக 9RT மாடலை வெளியிட்டிருக்கிறது ஒன்ப்ளஸ்.

9RT

In the Box: ஒரு 9RT மொபைல் போன், ஒரு கருப்பு நிற ஒன்ப்ளஸ் கேஸ், சிவப்பு நிற டைப் சி கேபிள், 65W Wrap சார்ஜர், சிம் ட்ரே எஜக்டர் மற்றும், ஒரு ரெட் கேபிள் கிளப் மெம்பர்ஷிப் கார்டு

In the Box

விலை: 8 GB RAM + 128 GB ஸ்டோரேஜ் - 42,999 ரூபாய்; 12 GB RAM + 256 GB ஸ்டோரேஜ் - 46,999 ரூபாய்

விலை

6.62 இன்ச், 120Hz, Fluid AMOLED டிஸ்ப்ளே சிறப்பாக இருக்கிறது. கலர்கள் பன்ச்சியாக இருக்கின்றன. டிசைன் மற்றும் டிஸ்ப்ளே: 4 ஸ்டார்ஸ்

டிஸ்ப்ளே

இரண்டு பக்கமும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5-வுடன் டிசைனும் பார்த்தவுடன் ஈர்க்கும் வகையில் இருக்கிறது. பின்பக்கம் விரல்ரேகைகள் பதியாத வகையில் மேட் சேன்ட்ஸ்டோன் பினிஷ் கொடுத்திருக்கிறார்கள், சிறப்பு.

9RT

9 சீரிஸில் டாப் மாடலான 9 ப்ரோவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே ஸ்னாப்டிராகன் 888 ப்ராசஸரையே 9RT-யிலும் பயன்படுத்தியிருக்கிறது ஒன்ப்ளஸ். நீண்ட நேரம் கேம் ஆடிய போதும் மொபைல் அவ்வளவாக சூடாகவில்லை.

ப்ராசஸர்

வேகமான நேவிகேஷனுடன் சிறப்பான பெர்ஃபாமன்ஸை வெளிப்படுத்துகிறது 9 RT. பயன்படுத்துவதற்கும் ஸ்மூத்தான இருக்கிறது இதன் சாப்ட்வேர். பெர்ஃபாமன்ஸ்: 4 ஸ்டார்ஸ்

பெர்ஃபாமன்ஸ்

சாதாரணப் பயன்பாட்டுக்கு ஒன்றரை நாள் வரை தாக்குப்பிடிக்கும் 4,500 mAh பேட்டரி. 65 வார்ப் சார்ஜர், 30 நிமிடத்தில் முழுமையாகச் சார்ஜ் ஆகி விடுகிறது. பேட்டரி: 4 ஸ்டார்ஸ்

பேட்டரி

50 MP + 16MP அல்ட்ராவைடு+ 2 MP மேக்ரோ ரியர் கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமராவும் உள்ளது. 9R-டன் ஒப்பிடும் போது கேமரா மேம்பட்டிருக்கிறது. எனினும், கேமரா பெர்ஃபாமன்ஸை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தியிருக்கலாம்.

கேமரா: 3.75 ஸ்டார்ஸ்

ஒன்ப்ளஸ் 9RT, வாங்கலாமா?

9R-விட சிறப்பாக, 9-க்கு இணையாக இருக்கிறது 9RT. எனினும், ஷாவ்மி மற்றும் சாம்சங்கிலும் 9RT-க்கு இணையான மொபைல் போன்கள் இருக்கின்றன. அவற்றையும் ஒரு முறை பார்த்துவிட்டு முடிவெடுக்கலாம்.

ரேட்டிங்: 4 ஸ்டார்ஸ்