நெய்வேலி செல்ஃபி முதல் #WhistlePodu வரை... 2020-ல் ட்விட்டரைக் கலக்கிய ட்ரெண்ட்ஸ்! #ThisHappened

ம.காசி விஸ்வநாதன்

ஒவ்வொரு வருடமும் அதன் தளத்தில் நடந்த டாப் விஷயங்களை '#ThisHappened' என்ற தொகுத்து வெளியிடும் ட்விட்டர். அப்படி இந்தியாவில் என்ன ட்ரெண்டானது என்ற 2020 ரிப்போர்ட்டை தற்போது வெளியிட்டிருக்கிறது ட்விட்டர் இந்தியா.

வருமான வரித்துறை ரெய்டுக்கு பிறகு விஜய் அவரது ரசிகர்களுடன் நெய்வேலியில் எடுத்த செல்ஃபிதான் இந்திய அளவில் இந்த வருடம் அதிகம் ரிட்வீட் செய்யப்பட்ட ட்வீட்!

'விரைவில் மூன்றாகிறோம்' என குழந்தையின் வருகையை அறிவித்த விராட் கோலி-அனுஷ்கா சர்மா பதிவுதான் இந்த வருடத்தின் அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட்.

அமிதாப் பச்சன் தனக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என அறிவித்த பதிவுதான் 2020-ல் இந்தியாவில் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட ட்வீட்.

இந்த வருடம் ட்வீட்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட எமோஜி இந்த சிரிக்கும் எமோஜிதான். அடுத்த இடங்களில் 🙏,😍,👍, 😭 எமோஜிகள் இருக்கின்றன.

அதிகம் ட்ரெண்டான திரைப்பட ஹேஷ்டேக் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் #DilBechara. அடுத்த இடத்தில சூர்யாவின் 'சூரரைப் போற்று' இடம்பெற்றிருக்கிறது.

எதிர்பார்த்ததை போல அதிகம் ட்ரெண்ட்டான ஸ்போர்ட்ஸ் ஹேஷ்டேக் #IPL2020 தான். அடுத்த இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸின் #WhistlePodu ஹேஷ்டேக் இடம்பிடித்திருக்கிறது.