சினிமா விமர்சனம்: போக்கிரி | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2007)

சினிமா விமர்சனம்: போக்கிரி

சினிமா விமர்சனம்
 

வி ஜய் உடம்புக்கு இது பழைய கமல் ஸ்டைல் ‘காக்கிச் சட்டை’. டெய்லர்... அட, நம்ம பிரபுதேவா!

காசு கொடுத்தால், காட்டுகிற ஆளைப் போட்டுத் தள்ளுகிற போக்கிரியாக விஜய். இன்டர்நேஷனல் தாதா பிரகாஷ்ராஜுக்கும் லோக்கல் தாதா ஆனந்தராஜ் குரூப்புக்கும் இடையே பவர் வார். தனி ஆவர்த்தன தாதாயிஸம் பண்ணும் விஜய், கொடுக்கிற காசுக்கு இரண்டு குரூப் ஆட்களையும் ரவுண்டு கட்டிக் காலி பண்ணுகிறார். ‘இவ்வளவு கொடூரமான ரௌடியா?’ எனக் காதலி அசினையே திகைக்க வைக்கும் விஜய் உண்மையில் யார் என்பதே க்ளைமாக்ஸ்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க