சினிமா விமர்சனம்: உன்னைப் போல் ஒருவன்


விகடன் பொக்கிஷம் .
சினிமா விமர்சனம்:
உன்னைப் போல் ஒருவன்

ழுத்துலகில் ஒரு பெரும் புரட்சியைச் செய்த ஜெயகாந் தன், இப்போது பட உலகில் புகுந்து அதையும் ஒரு கலக்குக் கலக்கியிருக்கிறார்.

'உன்னைப் போல் ஒருவன்' என்பது கடந்த ஆண்டு விக டன் பொங்கல் மலரில் அவர் எழுதிய முழு நாவல். அந்தக் கதையை அவரே ஒரு திரைப் படமாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் புகழ்பெற்ற நட்சத் திரங்கள் இல்லை; அனுபவம் பெற்ற டைரக்டர் இல்லை; பெரிய பெரிய 'செட்'டுகள் இல்லை. பல லட்சம் ரூபாய் முதலீடும் இல்லை. படத்தின் மொத்தச் செலவே எண்பதா யிரம் ரூபாய்தான்!

சில குடிசைகள், அவற்றிலே வாழும் ஏழை எளிய மக்கள், அவர்களுடைய ஆசாபாசங் கள், பிரச்னைகள் இவ்வளவு தான் முதலீடு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick