முந்தினம் பார்த்தேனே : சினிமா விமர்சனம் | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

முந்தினம் பார்த்தேனே : சினிமா விமர்சனம்


சினிமா விமர்சனம்
முந்தினம் பார்த்தேனே
 

டந்து போகும் காதல் தருணங்களைக் கவிதையாகச் சொல்லும் முயற்சி 'முன்தினம் பார்த்தேனே'.

சஞ்சய் (அறிமுகம்) சாஃப்ட்வேர் துறையில் வேலை பார்க்கும் காதல் கனவுகள்கொண்ட இளைஞன். கொஞ்சம் மாடர்ன் ஆக, அதே நேரத்தில் டிரெடிஷ னலாகவும், அளவுகொள்ளாத காதலுமாக இருக்கும் பெண்தான் அவரின் எதிர்பார்ப்பு. பூஜாவைச் (அறிமுகம்) சந்திக்கிறார். சஞ்சய் காதலில் விழும்போது, பூஜா பணத்தில் விழுகிறார். சஞ்சயின் எதிர்பார்ப்புக்கு எதிரான குணம்கொண்ட டான்ஸர் ஏக்தா(அறிமுகம்) அவரது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். ஏக்தாவைக் காதலிக்க ஆரம்பிக்கிறார் சஞ்சய். 'முன்னாள் காதலன் மூலம் ரகசியக் குழந்தை உண்டு' என்று ஏக்தாவைச் சுற்றி புரளிகள். இந்த முரண்பாடுகள் ஒன்றையன்று சந்தித்து வெட்டிக்கொள்ளும் புள்ளியில் ஏற்படும் கீறல், காதலில் விரிசல் உண்டாக்குகிறது. இறுதியாகத் தன் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் லிஸ்னாவை (அறிமுகம்) காதலித்துத் திருமணம் செய்கிறார் சஞ்சய். புரளி பொய் என்று தெரிந்து, ஏக்தாவைத் தேடிச் செல்கிறார் சஞ்சய். ஏக்தாவை அவர் சந்தித்தாரா என்பது க்ளைமாக்ஸ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க