ரெட் ஹாட் ஆபரேஷன்! | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

ரெட் ஹாட் ஆபரேஷன்!


இணைப்பு : ஜெயில் விகடன்
ரெட் ஹாட் ஆபரேஷன்!
 

சிறைபற்றி நீங்கள் படிக்கும், கேட்கும் செய்திகள் அத்தனையும் தணிக்கை செய்யப்பட்டவையே. சிறைக்கு உள்ளே நடக்கும் பல பகீர், திகீர் சம்பவங்கள் வெளியே அதிகம் தெரிவது இல்லை. பழைய சென்னை மத்திய சிறைபற்றிய சில உண்மைகள் சொல்கிறார் தமிழகச் சிறைத் துறைக்கான அரசு வழக்கறிஞர் கண்ணதாசன். ''ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 'ஒரு மனிதனின் அனைத்து உரிமைகளையும் முடக்க வேண்டும்' என்பதை மனதில்வைத்தே கட்டப்பட்டதுதான் இந்தச் சிறை. நேதாஜி, பிரபாகரன், கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலின் எனப் பல பேரைப் பார்த்திருக்கிறது இந்தச் சிறை. சிறையில் இருக்கும் தீப்பெட்டி சைஸ் அறைகள் பகல் முழுக்க வெப்பத்தை உள்வாங்கி இரவில் உமிழும். இதனால் ஓர் இரவு அங்கே தங்கினாலே உடம்பில் கொப்பளங்கள் வந்துவிடும். அருகில் பூங்காநகர் ரயில் நிலையம் இருப்பதால், அடிக்கடி கஞ்சா பொட்டலம் சிறைக்குள் வந்துவிழும். பஞ்சு சுற்றப்பட்ட குவார்ட்டர் பாட்டில்கள் பறந்து வரும். அப்போது அசைவச் சாப்பாடு கிடையாது. சிறைக்குள் நடமாடும் பூனை, எலி, பெருச்சாளி போன்ற வைதான் கைதிகளின்அசைவ உணவு. உள்ளே நுழைந்த ஐந்தாவது நிமிடத்தில் எந்த உயிரினமும் கைமா ஆகிவிடும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க