சிறையில் பூத்த சின்ன மலர்கள்! | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

சிறையில் பூத்த சின்ன மலர்கள்!


இணைப்பு : ஜெயில் விகடன்
சிறையில் பூத்த சின்ன மலர்கள்!
 

காலையில் வேலைக்குப் போய், மாலையில் வீடு திரும்புவது நமக்குச் சகஜம். ஆனால், சிறைக் கைதிகளுக்கு? அதுவும் சாத்தியம்தான், இந்த உ.பி. சிறையில். லக்னோவில் 1890-ம் ஆண்டு கட்டப்பட்ட மிகப் பழமையான சிறை ஒன்று இருக்கிறது. இந்த சிறைக்கு 500 மீட்டர் தொலைவில் பலவிதமான கடைகள்வைத்துப் பிழைக்கிறார்கள் கைதிகள். வேலைக்குச் சென்று வீடு திரும்புவதுபோல இந்தக் கைதிகளும் வேலைக்குச் சென்று வேலை முடிந்ததும் மாலையில் சிறைக்குத் திரும்புகிறார்கள். 'ஜெயில் ரோடு' என்ற சாலை முழுவதும் கைதிகள் நடத்தும் சைக்கிள் கடை, டீக் கடை, மளிகைக் கடை, சலவைக் கடை, துணிக் கடை, சலூன் போன்றவை நிறைந்திருக்கின்றன. தவிர, அருகில் உள்ள அரசு கரும்புப் பண்ணையில் சில கைதிகள் வேலை செய்கின்றனர். சிறைக்குள்ளேயே பால் பண்ணை, பேக்கரி, மசாலா தயாரிப்பு, விசைத்தறி என வியாபாரம் பார்ப்போரும் உண்டு. இந்தக் கைதிகளின் ஒரு வருட 'பிசினஸ் டர்ன் ஓவர்' மட்டும் சுமார் ரூபாய் 3 கோடி ரூபாய். இவை அனைத்தும் கைதிகளுக்கே பிரித்துக் கொடுக்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க