மனித உரிமை கிலோ எவ்வளவு? | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

மனித உரிமை கிலோ எவ்வளவு?


இணைப்பு : ஜெயில் விகடன்
மனித உரிமை கிலோ எவ்வளவு?
 

லகுக்கு மனித உரிமையின் மகத்துவத்தைப் போதிக்கும் அமெரிக்காவின் லட்சணம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்குச் சாட்சி, குவான்டனாமோ சிறைச்சாலை!

2001-ல் ஆப்கானிஸ்தானில் யுத்தம் நடத்திய அமெரிக்கா, போர்க் கைதிகளை அடைத்துவைப்பதற்காக கியூப வளைகுடாப் பகுதியில் தொடங்கிய ரகசியச் சிறைச்சாலைதான் குவான்டனாமோ. சுமார் 800 பேர் அங்கு அடைத்துவைக்கப்பட்டு இருந்தனர். தூங்கவிடாமல் அடிப்பது, நிர்வாணப்படுத்தி நாய்களை விட்டுக் கடிக்கவிடுவது, பல நாட்கள் பட்டினி போடுவது, நாற்றம் அடிக்கும் கழிவுகளில் போட்டுவைப்பது என அனைவரின் மீதும் மிக மோசமான சித்ரவதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. குவான்டனாமோ சிறைக்குச் செல்லும் அமெரிக்க அதிகாரிகளுக்குச் சித்ரவதை முறைகள்பற்றி சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், கொரிய யுத்தத்தின்போது சீன கம்யூனிஸ்ட்டுகள் கையாண்ட சித்ரவதை முறைகள்தான் அந்தப் பயிற்சி வகுப்புகளில் சொல்லித் தரப்பட்டதாகவும் 'இன்டர்நேஷனல் ஹெரால்டு ட்ரிப்யூன்' பத்திரிகை எழுதியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க