சிறை செல்ல லஞ்சம்! | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

சிறை செல்ல லஞ்சம்!


இணைப்பு : ஜெயில் விகடன்
சிறை செல்ல லஞ்சம்!
 

சிறையில் சித்ரவதைக் கூடங்கள் இருக்கும். சிறையையே சித்ர வதைக் கூடங்களாக மாற்றியவர் ஹிட்லர். 1933-ல் ஜெர்மனியில் ரெய்க் ஸ்டாக் சிறை தீக்கிரையானபோது அரசியல் மற்றும் ராணுவ எதிரிகளை அடைப்பதற்காக உருவாக்கப்பட்டது நாஜி சிறைச்சாலைகள். யூதர்களைத் தேடிப் பிடித்துக் கைதுசெய்து கூட்ஸ் வண்டியில் நிர்வாணமாக அடைத்துச் சிறைக்கு அனுப்பினார்கள். வழியிலேயே இறந்துவிட்டால், அதிர்ஷ்டசாலி. இல்லைஎன்றால், டி4 ஆக்ஷன் ஆரம்பிக்கும். காற்றுப் புகாத அளவுக்கு மூடப்பட்ட அறையில் மந்தை மாதிரி மனிதர்களை அடைத்து, விஷவாயுவைச் செலுத்துவார்கள். மூச்சுத் திணறி ஒவ்வொருவராகச் செத்துமடிவதைப் பார்த்து மகிழ்வார் கள். இதுதான் டி4 ஆக்ஷன். துப்பாக்கியைப் பரிசோதிக்க யூதர் களை வரிசையாக நிற்கவைத்துச் சுட்டார்கள். மருத்துவப் பரிசோதனை என்கிற பெயரில் ஒவ்வொரு பாகமாக அலற அலற வெட்டி எடுத்தார்கள். தோலை உரித்தார்கள். வெந்நீரில் மிதக்கவிட்டார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க