வீட்டுச் சிறை! | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

வீட்டுச் சிறை!


இணைப்பு : ஜெயில் விகடன்
வீட்டுச் சிறை!
 

சிறைகளில் கொடுமையானது வீட்டுச் சிறை! முன்பே ஆரம்பித்துவிட்டாலும் 19-ம் நூற்றாண்டில் இருந்துதான் வீட்டுச் சிறை பிரபலமாக ஆரம்பித்தது.

முதன் முதலில் 'வீட்டுச் சிறை'யில் வைக்கப்பட்டவர் இராக்கைச் சேர்ந்த விஞ்ஞானி அல் ஹாத்தீம். 1011-ம் ஆண்டு எகிப்தில் வாழ்ந்தபோது, ஏடாகூடமாகப் பேசி மன்னர் காலிப்பின் கோபத்துக்கு ஆளானார். தண்டனையில் இருந்து தப்ப பைத்தியம் மாதிரி நடித்தார். காலிப்பின் உத்தரவுப்படி 1021-ம் ஆண்டு வரை வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார் ஹாத்தீம். வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட இன்னொரு முக்கிய நபர் கலிலியோ கலீலி. 'சூரியன் பூமியைச் சுற்றவில்லை. பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது' என்கிற அறிவியல் உண்மையைச் சொன்ன கோபர்நிக்கஸின் கருத்தை ஆதரித்தார். மதத்துக்கு எதிராகப் பேசுகிறார் என்று கொந்தளித்த மதவாதிகள், கலிலியோவைக் காவலில் வைத்துவிட்டார்கள். இப்போது வீட்டுச் சிறை முறையை அதிகம் பயன்படுத்தும் நாடு இத்தாலி. தண்டனை முடிகிற நிலையில் இருந்தாலோ, உடல் நலம் குறைவாக இருந்தாலோ, கைதிகளை வீட்டுச் சிறைக்கு மாற்றிவிடுவார்கள். ஏழையாக இருந்தால் வேலை பார்க்க அனுமதி உண்டு. தப்பிக்க நினைத்தால், பழையபடி சிறைக்குப் போக வேண்டும். நியூஸிலாந்தில் இரண்டு வருடங்கள் அல்லது அதற்குக் குறைவாக தண்டனை பெற்றால் வீட்டிலேயே சிறை இருக் கலாம். பல வருடச் சிறைவாசிகள் எப்போதாவது மூன்று மாதங்கள் வீட்டுச் சிறையில் இருக்க அனுமதி பெறலாம். மின்னணுச் சாதனங்கள் உதவியுடன் வீட்டுச் சிறைவாசிகள் கண்காணிக்கப்படுகிறார்கள். வீட்டுத் தொலைபேசித் தொடர்புகளைப் பதிவு செய்வார்கள். சில நாடுகளில் கைதியின் கால்களில் எலெக்ட்ரானிக் சென்ஸாரைப் பொருத்தி விடுவார்கள். கழற்ற முயற்சித்தாலோ, அனுமதிக் கப்பட்ட தூரம் தாண்டிச் சென்றாலோ, காவலர் களுக்குச் செய்தி அனுப்பிவிடும். செக் பண்ணு வதற்காக அவ்வப்போது குற்றவாளியின் வீட்டுக்கு போன் செய்வார்கள். போனை எடுக்காவிட்டால் ஜீப் வந்து நிற்கும். கோயில், மருத்துவமனை எங்கு சென்றாலும் அனுமதி வாங்க வேண்டும். இப்போது பெரும்பாலும் அரசியல் தலைவர்கள்தான் அதிகம் வீட்டுச் சிறை வைக் கப்படுகிறார்கள். இப்போது வீட்டுச் சிறையில் அடைக்கப் பட்டு இருப்பவர் பர்மாவைச் சேர்ந்த ஆங் சான் சூ கி. ராணுவ அடக்குமுறை ஆட்சிக்கு எதிராகப் போராடும் சூகி, கடந்த 20 வருடங்களில் 14 முறை வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க