தனியார் ஜெயில்! | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

தனியார் ஜெயில்!


இணைப்பு : ஜெயில் விகடன்
தனியார் ஜெயில்!
 

சிறைச்சாலையும்கூட பிரைவேட் லிமிடெட் ஆகிவிட்டன அமெரிக்காவில். செலவைக் குறைக்க அங்கு சிறைகள் தனியாரிடம் குத்தகைக்கு விடப்படுகின்றன. 1852-ல் கலிஃபோர்னியாவின் 'குவென்டின்' சிறை முதன்முதலில் தனியார்மயமானது. 1980-களில் ஒட்டுமொத்தச் சிறை நிர்வாகமும் தனியார்வசமாகிவிட்டது. பிறகு, இந்தக் கலாசாரம் ஐரோப்பாவுக்கும் பரவ 92-ல் இங்கிலாந்தில் முதல் பிரைவேட் ஜெயில் வந்தது. இப்போது அங்கு 12 தனியார் சிறைகள் இயங்குகின்றன. இந்தத் தனியார் சிறைகளில் மனித உரிமைகள் மதிக்கப்படுவதே இல்லை. ஒரு கைதிக்கு ஒரு நாளைக்கு 50 டாலர் என்று பணம் வாங்கும் தனியார் ஜெயிலின் அதிபர், அதில் பாதியை அடித்துவிடுவார். கைதிகளுக்கு அடிப்படை வசதிகள் உள்பட எதுவும் கிடையாது. இங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எந்தக் கணக்கும் இல்லை. 24 மணி நேரமும் விளக்குகள் எரிய, எப்போதும் கண்காணிப்பு கேமராக்கள் கவனித்துக்கொண்டே இருக்க, இந்த தனியார் சிறைச்சாலைக்குள் ஒருவர் போய்விட்டால், வெறும் சக்கைய£க, பைத்தியம் பிடித்துத் திரும்புவது தவிர வேறு வழிஇல்லை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க