திகு திகு தீர்ப்புகள்! | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

திகு திகு தீர்ப்புகள்!


இணைப்பு : ஜெயில் விகடன்
திகு திகு தீர்ப்புகள்!
 

குற்றங்கள் மட்டுமல்ல... சில சமயம் தீர்ப்புகள்கூட அதிரவைக்கும். 1899-ம் ஆண்டு 22 வயதான ரிச்சர்ட் ஹோனெக் என்பவருக்கு கொலைக் குற்றத்துக்காக மரணம் வரை சிறையில் கழிக்க வேண்டும் என ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 84 வயது வரை சிறையிலேயே கழித்தார் ரிச்சர்ட். அப்புறம், பாவம் பார்த்து ரிச்சர்ட்டை ரிலீஸ் செய்தார்கள். 1973-ம் ஆண்டு கலிஃபோர்னியாவில் ஜுவான் கொரானா என்பவர் 25 தொழிலாளர்களைக் கொடூரமாகக் குத்திக் கொன்றார். இந்தக் குற்றத்துக்காக அவருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை 25 ஆயுள் தண்டனைகள்!

1994-ம் ஆண்டு ஒக்லாஹாமா மாகாணத்தில் டாரன் பென்னால்ஃபோர்ட் என்ற கிரிமினலுக்கு 2,200 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கற்பழிப்பு, கொலை, திருட்டு, ஆள் கடத்தல் என்று அவன் செய்யாத குற்றங்களே இல்லை. இந்தத் தீர்ப்பைப் பார்த்து மிரண்டுபோன டாரன் மேல் முறையீடு செய்தான். அங்கே அவனுடைய குற்றப் பட்டியலைப் பார்த்து டென்ஷனான நீதிபதி, தண்டனைக் காலத்தை 8,250 ஆண்டுகளாக நீட்டித்தார்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க