தப்பு செய்... தப்பிச் செல்! | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

தப்பு செய்... தப்பிச் செல்!


இணைப்பு : ஜெயில் விகடன்
தப்பு செய்... தப்பிச் செல்!
 

சிறையில் இருந்து தப்பிப்பது ஒரு கலை. சில 'கலை'ஞர்கள்பற்றிப் பார்ப்போமா? 16-ம் நூற்றாண்டில் ஜான் ஜெரார்ட் என்கிற மதபோதகர் மரண தண்டனை பெற்றார். ஆரஞ்சுப் பழச் சாற்றில் இருந்து தானே ஒரு மையை உருவாக்கி, நண்பர்களுக்கு மட்டும் புரிகிற மாதிரி ரகசியக் கடிதம் எழுதினார். ஜானின் திட்டப்படி நண்பர்கள் சிறை அகழி வரை படகைக் கொண்டுவர, பார்ட்டி எஸ்கேப்.

1930-களில் அமெரிக்காவில் பிரபல கேடியான ஜான் டிலிஞ்சரைச் சிறையில் அடைத்தது போலீஸ். சோப்புக் கட்டியைவைத்தே ஒரு பொய்த் துப்பாக்கியை உருவாக்கி காவலர்களை மிரட்டி, ஆயுதங்களைப் பறித்துத் தப்பினான் டிலிஞ்சர். போகிற வழியில் ஷெரீஃபின் ஃபோர்டு காரைத் திருடும்போது மாட்டிக்கொண்டான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க