தலையங்கம் | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

தலையங்கம்


மனம் மரத்த மரண வியாபாரிகள்!
 

ராய்ச்சிக்கூடத்தைவிட்டு மருத்துவமனைக்கு ஒரு புதிய மருந்து வந்து சேரக் குறைந்தது 10 வருடங்களாவது ஆகின்றன. எலி, குரங்கில் தொடங்கி... மனிதர்கள் வரை பலரிடம் சோதிக்கப்பட்டு, உரிய சான்றிதழ் பெற்ற பிறகே மருந்துக் கடைக்குள் நுழையும் தகுதியைப் பெறுகிறது. நோயைக் குணப்படுத்துவதற்காகக் கொடுக்கப்படும் மருந்து, நோயைவிடக் கொடிய விளைவுகளை ஏற்படுத்திவிடக் கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வுதான் இந்தக் கட்டுப்பாடுகளுக்குக் காரணம்!

ஆனால், உறக்கத்தில் இருப்பவனின் உறுப்பையே உருவி எடுத்து விற்றுப் பிழைக்கிற காலமல்லவா இது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க