வாசகர்களே... வாங்க கலக்கலாம்! | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

வாசகர்களே... வாங்க கலக்கலாம்!


வாசகர்களே... வாங்க கலக்கலாம்!
 

சுமார் 40 வருடங்களுக்கு முன் சீர்காழியில் 'இன்பக் கனவுகள்' என்ற நாடகத்தில் நடித்துக்கொண்டு இருந்தார் எம்.ஜி.ஆர். அப்போது எதிர்பாராதவிதமாக, நாடக மேடை சரிந்து விழுந்ததில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. பிரபல ராணுவ டாக்டர் வி.ஆர்.சம்பந்தம் பிள்ளைமருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்தார்கள். சம்பந்தம் பிள்ளை எனக்கு தாய் மாமா உறவு. அவர் எம்.ஜிஆருக்கு தன் வீட்டிலேயே வைத்தியம் செய்தார்.அந்த நேரம் வீட்டில் இருந்த நான் என்னால் முடிந்த சின்னச் சின்ன பணிவிடைகளைச் செய்தேன். சிறிது காலத்துக்குப் பிறகு மறைந்த முதல்வர் அண்ணா அவர்களுக்கு கார் பரிசளிப்பு விழாவுக்கு எம்.ஜி.ஆர் தலைமை. எம்.ஜி.ஆரைப் பார்க்கும் ஆர்வத்துடன் பொதுக் கூட்டத்தின் ஒரு ஓரத்தில் முண்டியடித்துக் கொண்டு நின்றிருந்தேன். என்னை ஒரு கணத்தில் பார்த்த எம்.ஜி.ஆர் உடனே என்னை மேடைக்கு அழைத்து நலம் விசாரித்தார். டாக்டர் குறித்தும் விசாரித்தார். நான் நெகிழ்ந்துபோனேன். ராமருக்கு அணில் செய்த சேவைகூட இல்லை நான் அவருக்குச் செய்தது. ஆனால், அவருடைய நன்றி உணர்ச்சி... ஓர் ஆச்சர்ய அனுபவம்!''

நீங்க எப்படி பீல் பண்றீங்க