தலையங்கம் | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

தலையங்கம்


விகடன் பொக்கிஷம்
எடைத் தேர்தல்!

டைத் தேர்தலுக்கு எப்போதுமே அரசியல் முக்கியத்துவம் உண்டு. பொதுவாக, ஆட்சியின் போக்குகளை விமரிசிக்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கிறது என்ற பயம் ஆளும் கட்சிக்கு ஏற்படுகிறது. தங்களது எதிர்ப்புப் பிரசாரம் எந்த அளவு பலன் கொடுத் திருக்கிறது என்று பார்க்க எதிர்க்கட்சியும் துடிக்கிறது.

இதனால்தான் இடைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாகத் தாங்கள் ஆட்சி நடத்துகிற விதத் தைப் பற்றிச் சிந்திக்கவிடாமல், தொகுதி மக்களின் கவனத்தைத் திருப்ப ஆளும் கட்சி முயற்சி செய்கிறது. திடீரென்று தொகுதிக்கு ராஜ மரியாதை கிடைக்கிறது. சாலை வசதியும் குடிநீர் வசதியும் செய்து தரப்படுகின்றன. அதிகாரிகளும் அமைச்சர்களும் தாங்கள் ஏதோ நிரந்தரமாக மக்கள் குறைகளைக் கேட்டு நடப்பவர்கள் போன்ற பிரமையை இந்த ஒரு மாதத்தில் அங்கே ஏற்படுத்துவார்கள். தொகுதி மக்கள் இந்த மாயையில் சிக்கிவிட்டால், ஆளும் கட்சிக்குச் சாதகம்தான்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க