வெள்ளி விழா வெள்ளி மழை! | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2010)

வெள்ளி விழா வெள்ளி மழை!


விகடன் பொக்கிஷம்
வெள்ளி விழா வெள்ளி மழை!

த்து நாட்களாகப் பட்டினி கிடக்கும் கோஷ்டியிலுள்ள ஒருவனுக்குத் திடீரென்று பஞ்சபட்ச பரமான்னத்தோடு விருந்து கிடைத்தால் எப்படி இருக்கும்? அதே நிலை தான் 'அம்பிகாபதி' படம் தயாரித்த சேலம் சங்கர் பிலிம்ஸாருக்கும்! தமிழ்ப் படங்கள் பல தயாராகி வருகின்றன. ஆனால், ஒன்றாவது இரண்டு வாரம்கூட ஓடமாட்டேனென்கிறது. இதிலே ஒருவரது படம் தொடர்ச்சியாக 25 வாரம் ஒரு பெரிய கொட்டகையில் ஓடிவிட்டு, அதே ஊரில் இன்னொரு கொட்டகைக்கு இடம் மாறுவதென்றால், அவருக்குக் குஷி பிறக்காதா? பார்த்தவர்களுக்கெல்லாம் வெள்ளிப் பேழை கள், கோப்பைகள் என்று பரிசாக வாரி வழங்கினர் சங்கர் பிலிம்ஸார்.

கொட்டகைக்காரர்களுக்கு ஒரு வெள்ளிப் பேழை; தியாகராஜ பாகவதருக்கு ஒரு பெரிய 'கப்'; ஸ்ரீமதிகள் சந்தானலக்ஷ்மி, மதுரம் ஆகியோருக்கு வெள்ளிக் கோப்பைகள்; என்.எஸ்.கிருஷ்ணன், எல்லிஸ் ஆர்.டங்கன் ஆகிய அனைவருக்கும் வெள்ளிக் கோப்பைகள் ஸார்! கூடவே, அம்பிகாபதி 25 வாரம் ஓடியதற்கு ஞாபகச் சின்னமாகப் பளிங்குக் கல்லில் விஷயத்தை எல்லாம் எழுதி, நட்டுவிட்டார்கள் கொட்டகையிலே! அதன் அருகில் மரம் ஒன்றையும் புதைத்திருக்கிறார்கள். சினிமா சென்டிரலில் 28-வது வாரமாக நடக்கிறது இப் பொழுது. கூடிய சீக்கிரம் இங்கே பொன்விழா நடக்கலாம். ஆனால் இப்படத்திற்கு இங்கே மரம் கிரம் நட இடங் கிடையாதே! என்ன செய்யப்போகிறார்களோ, தெரிய வில்லையே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க