வீரப்பன் சீஸன் - 2 | வீரப்பன் சீஸன் - 2 வனயுத்தம் வீரப்பன் வாழ்க்கை வரலாறு ஏ.ஆர்.ரமேஷ் பேட்டி | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/11/2011)

வீரப்பன் சீஸன் - 2

ம.கா.செந்தில்குமார்

''இது 11 வருட உழைப்பு. பழ.நெடுமாறன் ஐயா, கொளத்தூர் மணி, டி.ஜி.பி. விஜயகுமார், டி.ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன், முத்துலட்சுமி, மலைவாழ் மக்கள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோர் சொன்ன தகவல்கள் அனைத்தும் கிட்டத்தட்ட வீரப்பன் பற்றிய விதவிதமான வாக்குமூலங்கள். வீரப்பன் ஹீரோவா, வில்லனாங்கிற கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பலை. அதைப் படம் பார்த்துட்டு மக்களே முடிவு பண்ணட்டும். ஆனா, என் உழைப்பு உண்மையானது. கேள்விகள் எழாதுனு நம்புறேன்!'' - உள்ளங்கைகளைப் பரபரவெனத் தேய்த்துக்கொண்டு நம்பிக்கை பகிர்கிறார் ஏ.எம்.ஆர். ரமேஷ். 'குப்பி’, 'காவலர் குடியிருப்பு’ என உண்மைக் கதைகளைப் படமாக் கியவர், இப்போது சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை 'வன யுத்தம்’ என்ற பெயரில் படமாக்கி வருகிறார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க