சினிமாவை வணங்கும் பூசாரி நான்! | சினிமாவை வணங்கும் பூசாரி நான்! | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/11/2011)

சினிமாவை வணங்கும் பூசாரி நான்!

சென்னை வீக் எண்ட் க்ளிக்கர்ஸ்’. போட்டோகிராஃபியின் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கான ஓர் அமைப்பு. லலித் கலா அகாடமியில் தங்கள் உறுப்பினர்கள் 30 பேர் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சியை நடத்தினர். கண்காட்சியைத் திறந்துவைத்த இயக்குநர் பாலுமகேந்திரா, ''எனக்கு சாதி வெறி அதிகம். ஆம், நான் போட்டோகிராஃபர் சாதி. இங்கு உள்ள புகைப்படங்களில் சந்தோஷம் மட்டுமே தெரிகிறது. மக்கள் இல்லாத மண் எனக்குத் தேவையில்லை. அவர்களின் வருத்தம், இயலாமை, ஆதங்கம், கோபம் என அத்தனை உணர்வுகளையும் புகைப்படங்களாகப் பதிவுசெய்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். கிராஃபிக் ஆர்ட்டிஸ்ட்டுகளின் கைவண்ணம், உழைப்பு இங்கு உள்ள புகைப்படங்களில் அதிகமாகத் தெரிகிறது.

 'சினிமா என்ற இஷ்ட தெய்வத்தை வணங்கும் சக பூசாரி’ என கமல் என்னைச் சொல்வார். சபரி மலைக்கு மாலை போட்டு போகும்போது எதிரில் வருபவரும் மலைக்கு மாலை போட்டவராக இருந்தால் கிடைக்கும் சந்தோஷம்... எனக்கு சினிமாவை இஷ்ட தெய்வமாக வணங்குபவர்களை கண்டாலும் வருகிறது. போட்டோகிராஃபியை லவ் பண்ணுங்க. ஆனா, மக்கள் இல்லாத மண்ணைப் பதிவு பண்ணாதீங்க. இங்கு உள்ள புகைப்படங்களில் ரூபாய் நோட்டுடன் இருக்கும் இளைஞன் படம் எனக்குப் பிடித்திருக்கிறது. அது, ஊழல் நகரமாக உருவெடுத்து வரும் சென்னையைப் பிரதிபலிப்பதாக உணர்கிறேன்'' என்றார்.

''எனக்கு போட்டோகிராஃபினா ரொம்பவே இஷ்டம். ஆனால், வீட்டில் கெடுபிடி. இன்ஜினீயரிங் முடிச்சு வேலைக்கு வந்த பிறகாவது பிடிச்சதைச் செய்யலாமேனு தோணுச்சு. அப்படித் தொடங்கியதுதான் இந்த 'சென்னை வீக் எண்ட் க்ளிக்கர்ஸ்’ அமைப்பு. இதில் சேர காசு, பணம் தேவையில்லை. வயசு, மொழி, மதம் தடையில்லை. போட்டோ எடுக்கணும் என்று ஆசைப்படும் யார் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆகலாம்'' என்றார் இந்த அமைப்பின் நிறுவனர் நிக்கி ஜான்.

இந்த அமைப்பின் உறுப்பினர்கள் சிலரிடம் பேசினோம். முதலில் நிந்தன். ''போட்டோகிராஃபிக்கு எந்த கட் டுப்பாடும் கிடையாது. இருப்பதை அதன்இயல் போடு காட்டுவதில் தான் சவால். மாற்றுத்திறனாளியின் முகம் காட்டா மல் காலை மட் டும் காட்டி அவ ரின் வலியைமற்ற வர்களுக்கு கடத் துவது, ஈக்களைப் போர்வையாகக் கொண்டு தூங் கும் பிளாட்ஃபார வாசி என எங்க ளின் புகைப்படக் கருக்கள் எளிமை யானவை'' என்கிறார்.

''கருணை இல்லக் குழந்தைகளோடு தீபாவளியைக் கொண்டாடியது, ஈழத் தமிழர்களுக்காக மெரினாவில் மெழுகுவத்தி ஏற்றியது என அர்த்தம் உள்ள பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம்'' என்கிறார் தீபக்.

- க.நாகப்பன், படம்: பா.காயத்ரி அகல்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க