மகாராஷ்டிரா டு ராமேஸ்வரம்! | மகாராஷ்டிரா டு ராமேஸ்வரம்! | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/11/2011)

மகாராஷ்டிரா டு ராமேஸ்வரம்!

பைக்கில் புனித யாத்திரை

ழை அடித்துப் பெய்துகொண்டு இருந்த மாலை நேரம்... சேலம் மாவட்டம்,  பனமரத்துப்பட்டி அருகே தற்காலிகக் கொட்டகைகளில் முகாமிட்டு இருந்தது ஒரு கும்பல். அருகே நான்கு மோட்டார் பைக்குகள். பார்க்க அந்நிய முகங்களாக இருக்க... விவரம் அறிய பேச்சுக் கொடுத்தோம். ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ் டிராவில் இருந்து தமிழகக் கோயில்களுக்கு மோட்டார் பைக்கிலேயே பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களாம் அவர்கள்!

 ''ஒவ்வொரு வருஷமும் புனித ஸ்தலங்களுக்கு குடும் பத்தோடு கால்நடையாகப் போய் தரிசிப்பது எங்க பரம்பரை வழக்கம். ஆரம்பத்துல எங்க முன்னோர்கள் கால்நடையா நடந்தே மகாராஷ்டிரா தங்கர்வாடா கிராமத்துல இருந்து ராமேஸ்வரம், மதுரை, தென்காசினு தமிழகம் முழுக்க வலம்வருவாங்க. அப்புறம் மாட்டு வண்டிலயும் குதிரைலயும் வந் தாங்க. இப்போ நாங்க அஞ்சு வருஷமா குடும்பத்தோடு மூணு சக்கர மோட்டார் சைக்கிள்ல யாத்திரை வர்றோம்.

வருஷம் தவறாம வரலைன்னா தெய்வக் குத்தம் ஆகிடும். அதனால, ஒவ்வொரு மாசமும் கணிசமானத் தொகையை இந்த யாத்திரை செலவுக்குனு எடுத்து வைப் போம். 20 நாள் முன்னாடி நாலு மோட்டார் பைக்குல குழந்தை, குட்டி களோட மொத்தம் 25 பேர் கிளம்பினோம். பகல்ல மட்டும்தான் பைக் ஓட்டுவோம். ராத்திரியில டென்ட் அடிச்சு ரோட்டு ஓரமாகவே தங்கிப்போம்.

யாத்திரை கிளம்பின நாள்ல இருந்து ரெண்டு வேளை மட்டும்தான் சாப்பிடுவோம். சமைச்சுலாம் சாப்பிடக் கூடாது. கோயில் பிரசாதம், அன்னதானம்னுதான் சாப்பிடணும்.  கோயில், பொது இடம் தவிர மத்தவங்க வீடு, லாட்ஜ் இதுல எல்லாம் தங்கக்கூடாது. புருஷன், பொண்டாட்டினாலும் ஆம்பிளை, பொம்பளைங்க தனித்தனியாதான் தங்கணும். இப்படி நிறையக் கட்டுப்பாடுகள் இருக்கு. அசைவம் சாப்பிடக் கூடாது. பீடி, சிகரெட் தொடக் கூடாது.

ஒரு முறை வந்து போனா 20 ஆயிரம்கிட்ட செலவாகும். நாங்க இப்படி யாத்திரை வர்றது எங்க குடும்ப நன்மைக்காக மட்டும் இல்லை. எங்க கிராமத்துல நோய், நொடி வராம இருக்க வும், நல்லா மழை பெய்ஞ்சு, பயிர்கள் செழிச்சு வளரவும் வர்றோம். அதனால கிராமத்துல இருந் தும் காசு வசூலிச்சு கொடுப்பாங்க எங்களுக்கு.' என்றார் யாத்ரீகர்களில் ஒருவர்

இவர்கள் டென்ட் கொட்டகை  அமைத்து இருக்கும் இடத்துக்கு அருகில் இருக்கும்  வீட் டில் வசிக்கும் விமலா, ''இங்கே சொந்த வீடு கட்டி குடியேறி மூணு வருஷம் ஆகுது. யாத் திரை வந்தா இங்க இருக்குற காலி இடத்துலதான் இவங்க தங்குவாங்க. எவ்வளவு பெரிய மழை வந்தாலும் எங்க வீட்டுப் பக்கம் ஒதுங்க மாட் டாங்க. நான்கூட பலமுறை கூப்பிட்டு இருக்கேன். ஆனா, திட்டவட்டமா மறுத்துருவாங்க!'' என்கிறார்.

உங்க கிராமத்துக்கு மட்டுமில்லாம ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் வேண்டிக்குங்க!

  மகா.தமிழ்ப்பிரபாகரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க