வட்டியும் முதலும்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ராஜுமுருகன்ஓவியங்கள் : ஹாசிப்கான்

''மூத்தவனுக்குப் பிரச்னை இல்லைங்க... அவன் கவர்மென்ட் காலேஜ்ல தமிழ்ப் பேராசிரியர் ஆகி கண்ணுக்கழகா வந்துருவாங்க...'' அப்போதெல்லாம் சொந்தபந்தங்களிடம் அப்பா அடிக்கடி சொல்கிற டயலாக் இது!

 சரவணன் அண்ணனைத் தமிழ்ப் பேராசிரியர் ஆக்கிவிட வேண்டும் என்பதுதான் பிள்ளைகளைப் பற்றிய அப்பாவின் முதல் அஜெண்டா. அதற்குக் காரணமும் அண்ணன்தான். 2-விலேயே தி.ஜா-வையும் பாலகுமாரனையும் கரைத்தடித்துவிட்டு, வெட்டாத்தங்கரையில் வீறுநடை போடுகிறவனை தமிழ்ப் பேராசிரியராகத்தானே ஆக்க முடியும்? அதுவும் இல்லாமல் தமிழ்ப் பேராசிரியர் என்றால் ஊர்ப் பக்கம் தனி மரியாதை. கை நிறையச் சம்பளம். பட்டிமன்றம் அது இதுவென ஹிட்டடித்தால்... டி.வி. புகழ் வேறு. கல்யாணம் என்று வந்தால் 50 பவுன், மாருதி கார், ரொக்கம் என மாப்பிள்ளைக்கு கிராஃப் எகிறும். ஆகவே, அது நல்கனவுதான். அப்பாவின் கனவுக்கு லிட்டர் கணக்கில் பால் வார்க்கிற மாதிரியே இருந்தன அண்ணனின் அட்ராசிட்டிகள். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பி.லிட்., எம்.ஏ. படித்தவன், எக்கச்சக்கமாக குர்தா தைத்து மாட்டிக்கொண்டு, வைரமுத்துவின் ஜெராக்ஸாக அலைந்தான். தனது நடை உடை பாவனைகளால் பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தில் மூத்தவன் அதிர்வலைகளை உருவாக்கிக்கொண்டு இருந்தபோதே அடுத்தவன் குரு விளைந்து நின்றான். குரு விஷயத்தில் நடந்தது எங்கள் தாலுக்காவே எதிர்பாராத அதிரடி. அவனை கேட்டரிங் டெக்னாலஜி என்னும் சமையல் கலைப் படிப்பில் சேர்த்துவிட்டார் அப்பா. அதுவரை அப்படி ஒரு படிப்பு இருப்பது எங்கள் ஊருக்கே தெரியாது. அவன் வேறு லீவுக்கு வரும்போது, செஃப் ஜேக்கப் மாதிரி நீள குல்லா எல்லாம் போட்டுக்கொண்டு, கரி மண்டிய எங்கள் அடுக்களையில் மஷ்ரூம் பன்னீர் ஃப்ரை எல்லாம் செய்து கலவரப்படுத்தினான். படிப்பு, பயிற்சி முடித்ததும் அவனை மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்புகிற ஏற்பாட்டில் இருந்தார் அப்பா. அங்கே ஆரம்பச் சம்பளமே 50 ஆயிரம். ஆக, இந்த இருவரின் செயல்திட்டங்களிலேயே குடும்பம் தன்னிறைவை எய்திவிடும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்