தண்டனை யாகூப்புக்கு மட்டும்தானா ?

பாரதி தம்பி

ந்தியக் கூட்டு மனசாட்சி என்னும் பலிபீடத்தில் இன்னோர் உயிர் காவு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜூலை 30-ம் தேதி அன்று, யாகூப் மேமன் பிறந்த தினத்திலேயே அவருக்குத் தூக்குத் தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது இந்திய அரசு. கழுத்தில் தூக்குக் கயிறு ஏறும் முன்னர் தன் 21 வயது மகள் சுபைதாவுடன் பேச வேண்டும் என்பது யாகூப் மேமனின் கடைசி ஆசை. தன் கண் முன்னே மரணத்தை வைத்துக்கொண்டு ஒரு தந்தை, மகளிடம் என்ன பேசுவார்? அடுத்த நிமிடம் சாகப்போகும் தகப்பனிடம் ஒரு மகள் என்ன பேசிவிட முடியும்? கரைபுரண்ட கண்ணீருக்குப் பின்னர் யாகூப் பேசினார்... 'மகளே... தூக்குமேடையில் நின்றுகொண்டு சொல்கிறேன். நான் உன்னையும் நம் குடும்பத்தையும் கொலைப்பழியுடன் விட்டுச் செல்லவில்லை. நான் குற்றமற்றவன். 

நீ திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். நான் செல்கிறேன். என்னை மன்னித்துவிடு’ - மனதைக் கனக்கச்செய்யும் அந்தக் கண்ணீரின் பாரம், நம் யாருடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick