உயிர் பிழை - 15

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மருத்துவர் கு.சிவராமன்

'தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறிகட்டுமா என்ன?’ எனும் வாழ்வின் பிழைகளைச் சுட்டிக்காட்டும் வழக்குமொழி உண்டு. ஆனால், உயிர் பிழை விஷயத்தில், இது அப்படியே நேர்மறை. பனை மரம் என்ன, பக்கத்துக் காட்டில் உள்ள ஆலமரத்தில்கூட நெறிகட்டும். அடிபட்ட புண்ணுக்கு அருகில், கால் இடுக்கில், சளி கட்டும்போது கழுத்து, தொண்டைப் பகுதிகளில் காசம் முதலான சில தொற்றுநோய் வரும்போது நுரையீரல், கழுத்துப் பகுதியில், யானைக்கால் வியாதி முதலான நிணநீர் நாள அடைப்பில் நெறிகட்டுவது போன்றவை நோய்கள் வரவின் முக்கியமான அடையாளம். அப்படி இல்லாமல், நோய் எங்கோ ஓர் இடத்தில் ஒளிந்திருக்க, ரொம்ப நாளாக வலி இல்லாமல் வேறு எங்கோ நெறிகட்டி இருப்பதும் ஸ்கேனில் ஒரு நோயைத் தேடும்போது தட்டுப்படும். இந்த 'நெறி’  கட்டுவது என்பது (Swelling of Lymph Glands) உயிர் பிழையின் மிக முக்கிய சந்தேகக் குறி! 

முழுமையாக இயந்திரங்களின் பிடியில் சிக்கிக்கொண்ட மருத்துவ உலகம், உடலை உற்றுப்பார்த்து நோய் அறியும் கலையை சமீபகாலமாக இழந்துவருகிறது. 'அனுமானங்கள் வழியாக அல்ல... Evidence based Medication எனத் தடயங்கள் அல்லது அறிவியல் ஆதாரங்கள் பின்னணியில் மட்டும்தான் மருத்துவம்’ என முழுமையாக நகர்ந்துவிட்டது மருத்துவத் துறை. நோயாளிகளின் அவஸ்தைகளை அமைதியாகக் கேட்பது, கேள்விகள் கேட்டு அவரின் நேரடிப் பதில்கள் மூலம் அறிவது, உற்றுப்பார்ப்பது, தட்டிப்பார்ப்பது, தடவிப்பார்ப்பது என நோயாளியின் உடல் மீதான பரிசோதனைகள் மருத்துவத் துறையில் அநாவசியம் ஆகிவருகிறது. உயிர் பிழையின் மௌனமான வளர்ச்சிக்கு இந்த உதாசீனம்கூட ஒரு காரணம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்