காபி கோப்பைக்குள் நிறையும் கடல் - சிறுகதை

கவிதா முரளிதரன், ஓவியங்கள்: ஷண்முகவேல்

செருப்பைக் கழற்றிப் போட்டு விட்டு வீட்டுக்குள் நுழையும்போதே டிகாக்ஷன் இறங்கும் சத்தம் துல்லியமாகக் கேட்டது. வருமா... வராதா எனப் போக்குக் காட்டும் மழையின் முதல் துளிபோல் ஒரு சத்தம். மழை கிளர்த்தும் மண்வாசனையைப்போல ஃபில்டர் காபிக்கும் ஒரு வாசம் உண்டு. வீடு முழுவதும் நிறையும். அதுவும் அத்தையின் காபி, தெரு முழுவதும் வாசம் நிறைக்கும்.

இவ்வளவு சீக்கிரமாகவா அத்தையும் மாமாவும் வந்து விட்டார்கள்? கைக் கடிகாரத் தைப் பார்த்தேன். இல்லை, நான் தான் தாமதமாக வந்திருக்கிறேன். எனக்குத்தான் அலுவலகம், வேலை, விடுமுறை எல்லாம். அத்தைக்கும் மாமாவுக்கும் அதெல்லாம் இல்லை. ஆனால், பணிக்குத் தயாராகும் பரபரப்புடனும் நேர்த்தியுடனும்தான் தினமும் கிளம்புவார்கள். மாலை ஐந்து மணிபோல கிளம்பி, சங்கு முகத்துக்குச் சென்றால், திரும்புவதற்கு எப்படியும் ஏழு மணி ஆகும். அவர்கள் கிளம்புவதும் திரும்புவதும் அத்தனை அழகு. விடுமுறை நாட்களில் அதை வேடிக்கை பார்ப்பதுதான் எனது உச்சபட்ச சந்தோஷம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்