உப்பு கருவாடு - சினிமா விமர்சனம்

டம் எடுத்து, ஹிட் அடித்து கோல்டு ஃபிஷ் ஆக நினைக்கும் இயக்குநர் ஒருவர், படம் எடுப்பதற்குள் கருவாடு ஆகும் கதைதான் `உப்பு கருவாடு'.

ஒரு ஃப்ளாப், ஒரு டிராப் என நொந்து போயிருக்கும் இயக்குநர் கருணாகரனுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஒரே கண்டிஷன், ஹீரோயின் தயாரிப்பாளரின் மகள். நல்ல கதை, பக்கா டீம், அறிமுக ஹீரோ... என எல்லாம் கருணாகரனிடம் தயார். நாயகிக்கு மட்டும் ரிகர்சல் முடிந்தால் படப்பிடிப்புக்கு போகலாம். ஆனால், சரியாக ஷூட்டிங் தொடங்கும் நாள் அன்று ஹீரோயின் எஸ்கேப். வெறிகொண்ட தயாரிப்பாளர், கருணாகரன் அண்ட் கோ-வை உரிக்கிறார். என்ன நடந்தது என்பதுதான் காமெடி க்ளைமேக்ஸ்.

சிரிக்கவும் சிரிக்கவைக்கவும் சான்ஸே இல்லாத கேரக்டர் கருணாகரனுக்கு. சொதப்பாமல் செய்திருக்கிறார். உடன் இருக்கும் சாம்ஸுக்கும், டவுட் செந்திலுக்கும்தான் எல்லா வேலைகளும். “ஒரு படத்துக்கு டைரக்டர்தானே இம்பொட்டன்ட்” என தப்புத்தப்பாக இங்கிலீஷ் பேசி, கரெக்ட்டாக காமெடி செய்திருக்கிறார் செந்தில். அதுவும் பாடல் வாய்ப்பு கேட்கும் பெரியவரை பார்க்கும்போதெல்லாம் கொடுக்கும் ரியாக்‌ஷன்... ப்பா! மேனேஜராக மயில்சாமி செய்யும் சத்தியங்கள் ஒவ்வொன்றையும் ஸ்டேட்ட ஸாகப் போட்டால், 1,000 லைக்ஸ் நிச்சயம். வில்லத்தனத்தைவிட கவிஞராக ஸ்கோர் செய்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். அதுவும் க்ளைமேக்ஸ் பாடல் வைரல் மெட்டீரியல். குழந்தை சேஷ்டை களில் நந்திதா ஃபர்ஸ்ட் கிளாஸ் வாங்கினாலும், ஒரே சீனில் தெறிக்கவிட்டு டிஸ்டிங்ஷன் அடிக்கிறார் ‘சரவணன் மீனாட்சி’ புகழ் ரக்‌ஷிதா. ராதாமோகன் படம் என்றால் மட்டும் குமர வேலுக்குள் சக்தி புகுந்துவிடுகிறது. ஃப்ரேமுக்குள் சும்மா நின்றாலும் அட்ராக்ட் செய்கிறார்.

படத்தின் ஹைலைட்டே  பொன்.பார்த்திபனின் வசனங்கள் தான். ஒவ்வொரு கதாபாத்திரத் துக்கும் ஒரு ஸ்டைல் பிடித்து, அதற்குள் சென்னை மழைபோல ஓர் இடம் விடாமல் காமெடி தூவியிருக்கிறார். இயக்குநரின் ஹ்யூமர் சென்ஸ் செம ஹிட்.

எல்லாம் சரியாக அமைந் தாலும், கதைக்களம் ஒரு சீரியல் எஃபெக்ட் கொடுப்பதைத் தவிர்க்க முடியவில்லை. தொடர்ந்து சிரிக்க வைத்துவிட்டு சின்ன கேப் விட்டாலும், `சரி அடுத்து என்னப்பா?' என்ற கேள்வியை ரசிகன் கேட்டுக்கொண்டே இருக்கிறான்.

சர்க்கரைப் பொங்கலுக்கு வடகறி போலப் பொருந்தாத இசை. சின்ன சஸ்பென்ஸை சரியாகப் பயன்படுத்தியதில் தெரிகிறது எடிட்டர் டி.எஸ்.ஜெய்யின் தொழில் நேர்த்தி.

கொஞ்சம் உப்பு குறைவுதான். ஆனாலும் சுவைக்கலாம்.

- விகடன் விமர்சனக் குழு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick