ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

படம்: தனசேகர்

விகடன் வாசகர்களுக்கு வணக்கம். நான் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் பேசுகிறேன்.

தலைநகர் சென்னையையும் தமிழ்நாட்டையும் உலுக்கிய இந்த மழை வெள்ளத்துக்குக் காரணம் இயற்கையா அல்லது மனிதனா என நம்மிடையே ஒரு பெரிய கேள்வி எழுகிறது. இயற்கை மழையாக தண்ணீரைக் கொடுக்கிறது. அந்த தண்ணீரைச் சேகரித்துவைக்கும் இடங்களான ஏரி, குளங்களை மனிதன் ஆக்கிரமிக்கிறான். அதன் விளைவு, மழைத் தண்ணீர் செல்ல இடம் இல்லாமல் ஊருக்குள் வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். `விவசாயத்துக்கும் அன்றாட வாழ்க்கைக்கும் தண்ணீர் இல்லை’ என அண்டை மாநிலங்களின் கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்தோம். ஆனால், தற்போது இயற்கையே அள்ளித்தந்த இந்த மழைநீரை நம்மால் தாங்கிக்கொள்ளவும் முடியவில்லை, சகித்துக்கொள்ளவும் முடியவில்லை, சேமிக்கவும் முடியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் சேலத்திலும் இதே நிலைமை இருந்தது. மழை வந்தால் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிடும். இந்த நிலையை மாற்ற முதலில் நாங்கள் செய்தது சில ஏரிகளைத் தத்தெடுத்துத் தூர்வாரியதுதான். இப்போது எவ்வளவு மழை கொட்டினாலும் தண்ணீர் தேங்காது. இதை எப்படிச் செய்தோம் என்பதைப் பகிர்ந்துகொள்கிறேன்.

`தங்க ஊசி என்பதால் கண்ணில் குத்திக்கொள்ள முடியாது' என்பதைப்போலத்தான் பிளாஸ்டிக்கும். பயன்படுத்த ஏற்றது, விலை குறைவு என்பதால் அனைத்துத் தேவைகளுக்கும் நாம் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகிறோம். தண்ணீர் பாக்கெட், டீ கப், பார்சல் கவர்... என இது நீள்கிறது. ஆனால், இந்த வெள்ளத்தில் தண்ணீர் வழிந்தோட வேண்டிய இடங்களை எல்லாம் அடைத்துக்கொண்டு நின்றவை இந்த பிளாஸ்டிக் பொருட்கள்தான். பிளாஸ்டிக் பயன்பாட்டில் நாம் பின்பற்றவேண்டிய கட்டுப்பாடுகள் என்னென்ன, பிளாஸ்டிக் கழிவுகளை எப்படி அப்புறப்படுத்த வேண்டும்?

ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்புக்குத் தொட்டி அமைப்பதை யாரோ சொல்லி நாம் செய்ய வேண்டியது இல்லை.  அது நம்மைப் பாதுகாக்க, இயற்கையைப் பாதுகாக்க நாம் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை நடவடிக்கை. சென்னை நகரத்தின் 50 சதவிகித வீடுகளில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் இருந்திருந்தால், இப்போதைய பாதிப்பு சரிபாதியாகக் குறைந்திருக்கும். இனியேனும் புதிய வீட்டுக்கான அனுமதிக்கு மழைநீர் சேகரிப்புத் தொட்டியை ஒரு நிபந்தனையாக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பு என்பது நமக்கு சமூக தற்கொலை. `மக்கள்தொகை பெருக்கம்; வசிக்க இடம் தேவை; அதனால்தான் ஆக்கிரமிப்பு' என சிலர் இதை நியாயப்படுத்துகின்றனர். மக்கள்தொகை பெருகினால் முதலில் காக்க வேண்டியது ஏரிகளையும் குளங்களையும்தான். ஏனெனில், அதிக மக்கள் தொகைக்குத் தேவைப்படும் அதிகத் தண்ணீரை இந்த ஏரியும் குளமும்தான் தர வேண்டும். ஆக்கிரமிப்பு ஏன் அநியாயம்? அதை அகற்றுவது எப்படி நியாயம்?

10-12-15 முதல் 16-12-15 வரை 044-66802911* என்ற எண்ணில் அழையுங்கள்... உள்ளதைப் பேசுவோம்... உண்மையைப் பேசுவோம்!

அன்புடன்,

பியூஷ் மனுஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick