இன்பாக்ஸ்

நூற்றாண்டுகளாக நீரிலேயே மிதக்கும் வெனீஸ் நகரத்துக்கும் இப்போது ஆபத்து. புவி வெப்பமயமாதலால், வெனீஸ் வருடத்துக்கு 2 மி.மீ அளவு மூழ்குகிறது. `எதிர்காலத்தில் கடல்நீர் மட்டம் இன்னும் உயரும் என்பதால், வெனீஸ் வருடத்துக்கு 80 மி.மீ அளவுக்கு மூழ்கலாம்’ என எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள். 124 தீவுகளால் ஒன்றிணைந்துள்ள வெனீஸ் நகரத்துக்கு உயரமான கடல் அலைகளால்தான் கடும் பாதிப்பு. இதைத் தடுக்க, கடலின் முகத்துவாரங்களில்  செயற்கையான தடுப்புகளை உருவாக்கும் வேலை நடைபெற்று வருகிறது. ராட்சத அலைகள் வந்தால், வானிலை மையம் முன்கூட்டியே எச்சரிக்கும். அப்போது இந்தத் தடுப்புகள் செயல்பட்டு அலையைத் தடுத்து நிறுத்தும். `மோஸ் புராஜெக்ட்' என அழைக்கப்படும் இந்தத் திட்டத்தை முழுவதுமாக முடிக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகுமாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்