ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்கள் அனைவருக்கும் `ஹிப் ஹாப் தமிழா' ஆதியின் வணக்கம்...

நான் தமிழ் மீது கொண்டிருக்கும் ஆர்வமும், என் தாய் - தந்தை மீது காட்டும் அன்பும் வேறு அல்ல. `தமிழ் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?’ என என்னிடம் கேட்கும்போதெல்லாம் இதைத்தான் பதிலாகச் சொல்வேன். தமிழனாகப் பிறக்கும் ஒவ்வொருவருக்குமே தமிழ் மீது அன்பு இருந்தே தீரும். தமிழ் மொழியின் பெருமைகளாக, அது நமக்குத் தந்த கொடைகளாக நான்  நினைப்பது எவற்றைத் தெரியுமா?

எவ்வளவு தடைகள் வந்தாலும் திறமையாளன் நிச்சயம் ஜெயிப்பான். அந்தத் திறமையே அவனுக்கு வெளிச்சமாக மாறும். இதைத்தான் `பூக்கடைக்கு எதுக்கு விளம்பரம்?’ என்பார்கள். நம் திறமையை நாம் வெளிக்காட்டிக்கொண்டே இருந்தால், அது நம்மை உயர்ந்த இடம் நோக்கி நகர்த்திக்கொண்டுபோகும். இதற்கு என் வாழ்வில் இருந்தே உண்மை உதாரணம் சொல்கிறேன்.
என் வாழ்வில் இசைக்கு அடுத்த முக்கிய இடம் நட்புக்குத்தான். `இசைதான் என் வாழ்வு’ என முடிவுசெய்தபோது எனக்கு உற்சாக உந்துசக்தி தந்தது நண்பர்கள்தான். என் திறமையை மதித்து என் இசையோடு இணைந்த நண்பன் ஜீவாவின் நட்பு மிக முக்கியமானது. நான் மிகவும் மதிக்கும் சில நண்பர்கள் பற்றியும், நட்பு எனக்குள் நிகழ்த்திய அற்புதங்கள் பற்றியும் சொல்கிறேன்.

சிறுவயதில் இருந்தே புத்தக வாசிப்பு என்பது என்னோடு ஒட்டிக்கொண்ட நல்ல பழக்கம். எல்லோரும் ஆங்கில நாவல்கள் படித்தபோது, `தமிழ்லயே நிறைய நல்ல புத்தகங்கள் இருக்கு. அதைப் படி’ என்றார் அப்பா. அப்போது நான் வாசித்ததில் மறக்கவே முடியாதது... சாண்டில்யன் எழுதிய `யவனராணி.’ அது எனக்குள் நிகழ்த்திய ரசவாத அனுபவம் பற்றி, புத்தக வாசிப்பு இசைக்குள் என்னைக் கைப்பிடித்து அழைத்துப்போன அனுபவம் பற்றி உங்களோடு பகிர்கிறேன்!

17-12-15 முதல் 23-12-15 வரை 044-66802911* என்ற எண்ணில் அழையுங்கள். இசைபடப் பேசுவோம்! 

அன்புடன்,

ஆதி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick