மழையிடம் என்ன கற்றுக்கொண்டோம்?

பொறியாளர் கோ.சுந்தரராஜன்

விடாது மழை பெய்துகொண்டிருந்த அந்த டிசம்பர் 1-ம் தேதி இரவில், சென்னையில் பெரும்பாலானவர்கள் `சற்றே அதிகமாகப் பெய்யும் சாதாரண மழை' என்றுதான் நினைத்திருப்பார்கள். அடுத்த நாள் தங்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் வெள்ளத்துக்கு அது முன்னோட்டம் என்பதை, பலரும் உணர்ந்திருக்க மாட்டார்கள். அப்படி உணராதவர்களில் ஈக்காட்டுத்தாங்கல் டிஃபென்ஸ் காலனியில் வாழ்ந்த தம்பதியும் அடக்கம்.

72 வயது கர்னல் வெங்கடேசனும் அவரது மனைவி கீதாவும் அப்படித்தான் நினைத்தார்கள். வெள்ளம் வரத் தொடங்கியபோது சாதாரணமாகவே அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். அதன் அபாயத்தை உணர்ந்தபோது அவர்களால் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடிய வில்லை. வீட்டைவிட்டு வெளியே வந்தால்தான் மாடிக்குச் செல்ல முடியும் என்ற நிலையில், அதற்குப் பயந்து வீட்டுக்கு உள்ளிருந்தே அபயக்குரல் எழுப்பியபடி டைனிங் டேபிள், பின்னர் அதற்கு மேல் சேர் என ஏறி நின்று கொண்டிருந்தவர்களை, 9 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு வெள்ளம் காவுகொண்டது. எல்லைப் போராட்டத்தில் மீண்ட உயிர், சென்னையின் வெள்ளப் போராட்டத்தில் பலியானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்